11 November 2013

"மோடிக்கு 5 ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகம் பரிசு!



திங்கட்கிழமை, 11 நவம்பர் 2013 12:35

மோடிஜி வர வர ஒரே வரலாற்றுப் ப்ரியராகிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு பட்டேல் - நேரு வரலாற்றை வைத்து அரசியல் செய்தார். இப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

ஆனால் பழைய வரலாறுகளில் மோடிக்கு இருக்கும் ஆர்வம் நவீன வரலாறுகளில் இல்லை. பத்து வருடங்களுக்கு முந்தைய குஜராத் கலவர வரலாற்றைப் பற்றி பேசினால் ‘’ ஏம்பா பழசையே பேசுறிங்க..டெவலப்மெண்ட் பத்தி பேசுங்க..’’ என்று பா.ஜ.கவினர் சலித்துக் கொள்கின்றனர்.

வரலாறு என்ன உங்கள் கட்சி மனிஃபெஸ்டோவா ப்ரதர்?

இந்தியாவின் வரைபடத்தை காங்கிரஸ்தான் மாற்றியமைத்தது என்கிறார் மோடி. பிரிட்டிஷ் இந்தியாவிற்கு முந்தைய இந்திய வரைபடத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? பல்வேறு நாடுகள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒரு நிலப்பரப்பை முகலாயர்களும் பின்னர் கிழக்க்திந்திய கம்பெனியாரும் இறுதியாக பிரிட்டிஷ்சாரும் தங்கள் ஆதிக்கத்திற்காக பேரசாக ஒருங்கிணைத்தனர். இந்த ஒடுக்குமுறைக்கான தேசியம்தான் பின்னர் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்கான தேசியமாகவும் உருமாறியது. ஆதிக்ககாரர்கள் இங்கே வரும்வரை இந்திய தேசியம் என்ற ஒன்று இருந்ததா? அப்படியெனில் அதன் பூகோள எல்லை என்ன? அதன் அரசியல் சட்டம் என்ன?

இந்து மதத்தை மட்டுமே இதன் ஒரே அளவுகோலாகக் கொண்டு ஒரு தேசியத்தை நீங்கள் கற்பிதம் செய்யக் கூடும் எனில் அந்த தேசியம் கிறிஸ்துவ அடிப்படைவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் உருவாக்க விரும்பும் மதரீதியான சர்வதேசியத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

தீபாவளி பரிசாக மோடிக்கு ஐந்தாம் கிளாஸ் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை இளைஞர் காங்கிரஸ் அனுப்பியதாம். இனி ஒண்ணாங்கிளாஸ் புத்தகத்தை அனுப்பினாலே போதும்!

-
மனுஷ்யபுத்திரன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home