4 November 2013

விமான ஒலியால் ஏற்படும் விபரீதம்



விமான ஒலி மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதய நோய் அல்லது ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மூளை செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்று தெரிவிக்கிறது.
மேற்கு லண்டன் பகுதியில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகே வசிக்கும் சுமார் 35 லட்சம் மக்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.விமானங்களின் ஒலி மிக அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஸ்ட்ரோக் காரணமாகவோ அல்லது இதய நோய் காரணமாகவோ மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவது அல்லது இறக்கும் நிகழ்வுகள் சாதாரணமாக மற்ற பகுதிகளில் இருப்பதைக் காட்டிலும் 10லிருந்து 20 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
விமான ஒலி மக்களின் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் இந்தக் கட்டுரையை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home