புல்லட் பாபா கோயில்....!!
ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளை கடவுளாக மக்கள் வணங்கும் அதிசயத்தை ராஜஸ்தானின் ஜோத்பூரு என்ற ஊரில் காண முடியும்.
இந்த வினோதமான ஆலயம் ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் சோட்டிலா எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. அதாவது 1991-ஆம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் தன் புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மரத்தில் மோதி இறந்துவிட்டார்.
அதன்பிறகு அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மறுநாள் அது விபத்து நடந்த மரத்தருகே நின்றுகொண்டிருந்ததாம்.
எனவே அந்த புல்லட் திரும்பவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் மறுநாள் அதே மரத்தருகே சென்றுவிட்டதாம் அந்த புல்லட் வண்டி.
அன்றிலிருந்து ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா ஆலயம் என்று அந்த மரத்தையும், புல்லட்டையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
யார் இந்த புல்லட் பாபாவை வணங்கினாலும் அவர்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.
சங்கை ரிதுவான் கருத்து :
இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...
கடவுள் என்பவர் நம்மை உருவாக்கியவராக இருக்க வேண்டும். நம்மால் உருவாக்கப்பட்ட பொருளாக இருக்க கூடாது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home