இளையராஜா பாவம் பாஸ் !
நீங்கள் இளையராஜா ரசிகரா? இளையராஜாவின் பல
பாடல்களைக் கண்ணை மூடிக் கேட்டு ரசித்தால் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
ஆனால் அந்தப் பாடல்கள் படமாக்கப்பட்ட லட்சணத்தைப் பார்த்தால் கொலைவெறி
வரும். ஒய் பிளட்? சேம் பிளட்! வாங்க,
சில ரத்தக் களறிகளைப் பார்ப்போம்!
'முதல் இரவு’ படத்தில் 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்’ என்று ஒரு பாடல்.
அனேகமாக ட்யூன் வாங்கும்போது, ''காதலர்கள்
இரண்டுபேர் காதல் பரவசத்தோடு ரயிலில்
போறப்போ பாடுற டூயட் சார்'' என்று
சொல்லி இளையராஜாவிடம் ட்யூன் வாங்கி
இருப்பார்கள்போல. பாடலின் ஓப்பனிங்
ஷாட்டில் சிவக்குமாரையும்
சுமித்ராவையும் கட்டிப்பிடி
த்து நிற்கச் சொல்லி
பின்னால் ரயில் வரும்போது ஒரு ஷாட்,
பாடல் முடியும்போது ஸ்டேஷனில்
ஒரு ரயில் வந்து நிற்பதுபோலவும் இரண்டு ஷாட்களில் ரயில்
காட்டுகிறார்கள். கிராமத்தில் சிறுவர்கள் ரயில் விளையாட்டில் வாயில் கை வைத்து 'கூஊஊஊஊ...’ என்று ஓடுவார்களே,
அதுபோல் பாடலின் ஆரம்பத்தில் சுமித்ரா கூவியபடி ஓடிவருகிறார். சிவக்குமார் கொஞ்சம் மேடான
பகுதியில் கையைக் கட்டி நிற்கிறார். 'மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்... இனி எந்தத் தடையுமில்லை,
எந்நாளும் உறவின்றிப் பிரிவும் இல்லை’ என முடித்த பிறகு மீண்டும் 'கூஊஊஊஊ...’ என்று வாயில் கைவைத்து சுமித்ரா ஓடுகிறார். ஆக முழுப் பாடலையும் சுமித்ராவை ரயிலாக உருவகப்படுத்திப் பாடலை எடுத்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே குறியீடுகள் வெச்சுப்
படம் எடுத்ததுக்குப் பாராட்டித்தான் ஆகணும் பாஸ்.
பட்டாக்கத்தி பைரவன்’ என்று ஒரு படம்.
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல. அதில் வரும்,
'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ என்ற பாடலைப் பாருங்கள். இன்னும் அதிர்ந்துபோவீர்கள். ரத்தச்
சிவப்பு கலரில் கோட், உள்ளே ஒயிட் ஷர்ட்,
சிவப்பு கலர் டை என சிவாஜி மொட்டைப்
பாறை மேல் கொளுத்தும் வெயிலில் நிற்பார். ஜெயசுதா பாண்டி ஆட்டத்தில் கல்
போட்டுத் தவ்வுவதுபோல் நான்கு தவ்வு தவ்வுவார்.. அதன் பிறகு சிவாஜி
பாடுவார், 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ உண்மைதான் பாஸ்.
அங்கே நின்று பாடும் சிவாஜிக்கு, 'என்னை எங்கேயாவது நிழல்ல நிக்க வைங்கப்பா. ரொம்ப வெயிலா இருக்கு’ என்று எண்ணம் ஓடத்தான் செய்திருக்கும்.
'கரும்புவில்’ படத்தில் வரும் 'மீன் கொடித் தேரில்’
பாடல் கேட்டிருப்பீர்கள்.
பார்த்திருக்கிறீர்களா? ஐயயோ, பார்த்துவிடாதீர்கள். இந்தப் பாடலைப் பார்த்துவிட வேண்டும்
என்ற ஆர்வத்தில் தேடிப் பிடித்து பார்த்தபோது நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்.
ஆதிவாசி கெட்டப்பா, மீனவர்கள் கெட்டப்பா எனக் குழப்பியடிக்கும் காஸ்ட்யூமில் ஹீரோ சுதாகரும், ஹீரோயினும் இருப்பார்கள். பாடல் முழுவதும் 'நமக்குப் பேசிய சம்பளம் தருவார்களோ,
மாட்டார்களோ’ என்ற குழப்பத்தில்
இருப்பது போலவே இருப்பார் சுதாகர். கொஞ்சமே கொஞ்சமாய் தண்ணீர் ஓடும் ஆறு, ஏழ்மையான குடிசை வீடு, குரூப் டான்ஸுக்கு ஷூட் பண்ணக்கூட ஆள் இல்லா பற்றாக்குறை...
ஆனால் பாடல் 'மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்...’
'நினைக்கத்
தெரிந்த மனமே’ என்று
ஒரு படம். 'கண்ணுக்கும் கண்ணுக்கும்
மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல்’ என
ஜேசுதாஸைப் பாடவைத்து அற்புதமாக இசையமைத்திருப்பார் இளையராஜா.
ஹைபிட்ச்சில் 'என்னென்ன
இன்பம் வாழ்க
வாழ்கவே மாலைத் தென்றலே... மாலை கொண்டுவா வேளை வந்ததே வாழ்த்துப் பாடவா’
எனக் காதலால்
கசிந்துருகி இருப்பார். ஆனால் படத்திலோ நடந்து போகும் ரூபிணியை ஈவ்டீஸிங் செய்தபடி மோகன்
பாடுகிற கொடுமையைப் பார்க்கவேண்டுமே. மோகன் பாடுவதும், ஓடுவதும், பேபி சைக்கிளில் சென்று கீழே விழுவதும்,
ரூபிணி மோகனின்
கையை மடக்கி முதுகில் கும்மாங்குத்து விடுவதும் என முழுப் பாடலிலும் அட்டகாசம்
பண்ணியிருப்பார்கள்.
இப்படி
நூற்றுக்கணக்கான பாடல்களைப் பட்டியல் போட முடியும். அதனால் இளையராஜா ரசிகர்கள்
பாடலைக் கேட்பதோடு நிறுத்திக்கொண்டால் நல்லது!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home