குழந்தைகள் ஏன் அழுகின்றன?
புதிதாய்ப் பிறந்த ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை கூட நாள் ஒன்றிற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை அழும்.
முதல் முறையாக தாயாகவோ தந்தையாகவோ ஆகியிருக்கும் உங்களுக்கு குழந்தை எதற்காக
அழுகிறது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். பசியா, ஜலதோஷமா, தாகமா அல்லது தூக்கி
வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா, எதற்காக அழுகிறது குழந்தை? குழந்தைகள்
அழுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன, அவர்களை அமைதிபடுத்துவது எப்படி
என்பதைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையை மேலும்
மேலும் நன்கு புரிந்துகொள்ளும் போது அதன் அழுகையின் தன்மையை வைத்து குழந்தைக்கு
என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எனக்கு உணவு தேவை
குழந்தை அழுவதற்கான பொதுவான காரணம் பசி தான். குழந்தையின் வயிறு சிறியதாகையால் அதனால் அதிகம் சாப்பிட முடியாது. குழந்தை பசியோடு இருக்கக் கூடும் ஆகவே அழுதால் அதற்கு பால் புகட்டுங்கள்.

நான் சொகுசாக இருக்க வேண்டும்
சில குழந்தைகள் தங்களது நாப்கின்கள் மாற்றப்படுவதைப் பற்றி அதிகம் கவலைப்படாது. சில குழந்தைகள் தங்கள் தோல் லேசாக நமைச்சல் எடுத்தாலே அழத் தொடங்கிவிடும். சில சமயங்களில் நாப்கின்கள் இறுக்கமாக பற்றியிருக்கிறதா அல்லது குழந்தையின் உடைகள் ஏதாவது அசௌகரியத்தை தந்திருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

எனக்கு இதமாக இருக்க வேண்டும் (அதிக சூடோ, அதிக குளிரோ கூடாது)
உங்கள் குழந்தை தனது மெத்தையில் படுத்திருக்கும் போது மிகவும் சூடாகவோ அல்லது சில்லென்றோ இருக்கிறதா என்பதை அதன் வயிற்றை தொட்டு சோதித்துப் பாருங்கள் (காலையோ கையையோ தொட்டுப் பார்க்க வேண்டாம். அது எப்போதும் சற்று சில்லென்றே இருக்கும்). குழந்தை சூடாக இருந்தால் போர்வையை விலக்கி விடுங்கள். சில்லென்றிருந்தால் போர்வையை போர்த்துங்கள். குழந்தை இருக்கும் அறையின் வெப்பநிலையை 64 டிகிரி பாரனீட் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னை தூக்கிவைத்துக் கொள்ளுங்கள்
சில சமயங்களில் உங்கள் குழந்தை தன்னை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடும். குழந்தையை முதல் சில மாதங்களுக்கு அதிகமாக தூக்கிவைத்திருப்பதால் குழந்தையை ”பாழாக்கி” விடுவோம் என்று கவலைப்பட வேண்டாம். குழந்தையை மடியில் கட்டிக் கொண்டு ஆனால் கைகளை சுதந்திரமாக வைத்த படி உங்கள் வேலைகளை கவனிக்க ஏற்படியான தோள்பட்டை ஆடைகள் (தீணீதீஹ் sறீவீஸீரீ) இருக்கின்றன.

எனக்கு ஓய்வு தேவை
பச்சிளங் குழந்தைகளால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது. ஆகவே, ”இனி என்னால் தாங்க முடியாது” என்று கூறுவதாகவும் அதன் அழுகை இருக்கலாம். அமைதியான இடத்திற்கு குழந்தையை எடுத்துச் செல்லுங்கள், சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தை தூங்க ஆரம்பிக்கும்.

எனக்கு உடல் நலம் சரியில்லை
உடல் நலமில்லாத குழந்தை வழக்கத்திற்கு மாறான தொனியில் அதிக சத்தத்துடனோ அல்லது ஒரு வித அவசரத் தொனியுடனோ அழும். அப்படி அழும் போது டாக்டரிடமோ அல்லது தாதியிடமோ குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். குழந்தை அழும் போது மூச்சுத் திணறல் இருந்தாலோ, வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் இருந்தாலோ உடனே டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

எனக்கு ஏதோ தேவை…ஆனால் சொல்லத் தெரியவில்லை
பல பச்சிளங் குழந்தைகள் வயிற்று வலியின் காரணமாக தொடர்ந்து அழக்கூடும். இதை சமாளிப்பது கடினம். உடனே தீர்க்க எந்த மாயாஜாலமும் இல்லை. சில அபூர்வமான சமயங்களில் இந்த வயிற்று வலி மூன்று மாதங்களுக்குக் கூட நீடிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது நல்லது.

எனது குழந்தை அழுகிறது, நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள். முயற்சி செய்து
பாருங்கள்.
குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள்
பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன. ஆகவே குழந்தையை போர்வையால் போர்த்தினாலோ அல்லது தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாலோ பாதுகாப்பாக உணர்கிறதா என்று பாருங்கள்.

பின்னணி சப்தங்கள்
கருவறையில் இருக்கும் போது தாயின் இதயத்துடிப்பு குழந்தைக்கு கேட்கும். மென்மையான இசையை ஒலிக்கச் செய்வது அல்லது தாலாட்டு பாடுவது& பின்னணியில் வாஷிங் மெஷின் சத்தம் வந்தாலும் பரவாயில்லை& ஆகியவை குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கச் செய்யும்.

மென்மையாக ஆட்டுவது
நீங்கள் நடக்கும் போதோ அல்லது அமர்ந்திருக்கும் போதோ மென்மையாக குழந்தையை ஆட்டுங்கள் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கான தொட்டில் சில குழந்தைகளை அமைதிபடுத்தும். காரில் செல்லும் போது சில குழந்தைகள் கார் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடனே தூங்கி விடும்.

மசாஜ் செய்து விடுங்கள்
மசாஜ் குழந்தைகளை அமைதிபடுத்தும். வயிற்று வலி இருக்கும் போது வயிற்றை தடவி விடுவது நல்லது. குழந்தையின் வலியை கஷ்டத்தைப் போக்க நீங்கள் ஏதோ முயற்சி செய்கிறீர்கள் என்ற ஆறுதலை அது உங்களுக்குத் தரும்.

குழந்தை விரல் சூப்புவது தவறில்லை
சில பச்சிளங் குழந்தைகள் விரல் சூப்புவார்கள். இது அவர்களுக்கு சொகுசான ஓர் உணர்வைத் தரும். ஆனால் விரல் சுத்தமாக இருக்க வேண்டும். ”சொகுசாக சூப்புவது” என்பது குழந்தையின் இதயத் துடிப்பை சீராக்கும், வயிற்றுக்கும் நல்லது, குழந்தையும் அமைதியாக இருக்கும்.

உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம்
தொடர்ந்து அழும் குழந்தைக்கு நீண்ட கால பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் பெற்றோர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகலாம். குழந்தையை அமைதிப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டீர்களேயானால் அதற்கு மேல் நீங்கள் செய்யக் கூடியது இதுதான்:

• நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்
• உங்களுக்கு கேட்காதவாறு குழந்தை
அழும்படி சிறிது நேரத்திற்கு எங்காவது பாதுகாப்பான இடத்தில் குழந்தையை விடுங்கள்.
• நண்பரையோ அல்லது உறவினரையோ அழைத்து
சிறிது நேரத்திற்கு குழந்தையை அவரிடம் தாருங்கள்.
• அக்கம்பக்கத்தில் உங்களைப் போன்று
புதிதாய் குழந்தை பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி உங்கள் குடும்ப
டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ளுங்கள்.
• உங்கள் குழந்தை தனது தேவையை உங்களுக்கு
தெரிவிக்க ஒவ்வொரு நாளும் புதிய வழிகளை கற்கிறது என்பதையும், இந்த அழுகைக் கட்டம்
ஒரு நாள் நிற்கும் என்பதையும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தகவலுக்கு நன்றி.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home