1 November 2013

சிங்கள ராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட இசைப்பிரியா, புதிய ஆதாரங்கள் வெளியீடு



சிங்கள ராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட இசைப்பிரியா, புதிய ஆதாரங்கள் வெளியீடு

சேனல் 4 நிறுவனம் தொடர்ந்து ஈழத்தில் 2009ல் நடந்த போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் போர் குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது, விடுதலைப்புலிகள் ஆட்சியில் ஈழம் இருந்த போது அங்கிருந்து ஒளிபரப்பப்பட்ட தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் ஈழம் சார்ந்த படங்களிலும் நடித்தவர். அவரை தான் போரின் இறுதி கட்டத்தில்நிர்வாணப்படுத்தி, கொடூரமாக கற்பழித்து கொன்றுள்ளார்கள் இரக்கமற்ற சிங்கள ராணுவம்.

இசைப்பிரியா போரில் சண்டையின் போது கொல்லப்பட்டதாக இலங்கை அரசு முன்பு தெரிவித்திருந்தது, ஆனால் அது பொய் என்பது சேனல் 4 ன் வீடியா ஆதாரங்களில் தெரியவந்துள்ளது.

சேனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் இந்த லிங்கில் 
http://www.youtube.com/watch?v=mns8uoephLU
பிரபாகரன் மகள் என்று நினைத்து இசைப்பிரியாவைப் பிடித்துக்கொன்ற இலங்கை ராணுவம்!


இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது.  

அந்த காட்சியில் கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, இலங்கை ராணுவத்தினர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வருகின்றனர். 
அப்போது அவர்கள், இசைப்பிரியாவை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறுகின்றனர். அதனைக்கேட்கும் இசைப்பிரியா, "ஐயோ அது நானில்லை..!" என்று அழுவதும் அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது. 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது இலங்கை அரசின் முகத்திரையை கிழித்தெறிந்து, அந்நாட்டிற்கு மேலும் ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இலங்கை ராணுவம் வழக்கம்போல் இதனை மறுக்கலாம்.
வழக்கம்போல் இந்தியா மவுனம்?
தற்போது வெளியாகி உள்ளதைவிட இலங்கை ராணுவத்தின் மிகக்கொடூரமான வீடியோ ஆதாரங்கள் வெளியானபோதும் மவுனம் சாதித்த மத்திய அரசு, வழக்கம்போல் தற்போதும் மவுனம் சாதிக்கலாம்.
அதுமட்டுமல்லாது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என கடைசி நாள் வரை போக்குக்காட்டிக்கொண்டே, இறுதியில் பங்கெடுத்துக்கொள்ள மிக அதிகமான வாய்ப்பே உள்ளது.
அதே சமயம் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்த இதர உறுப்பு நாடுகளில் ஏதாவது தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யலாம்.

 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home