18 November 2013

ஓட்டல் சரவணபவனின் பகல்கொள்ளை - ஓர் அதிர்ச்சி செய்தி.....!!



சாதாரணமாக சென்னையில் உள்ள சாலையோர டீக்கடைகளில் ஒரு டீ அல்லது காபி குடித்தால் ரூ.7 தான் செலவாகும். கொஞ்சம் பெரிய ஓட்டலில் சென்று டீ குடித்தால் பத்து ரூபாய் அல்லது பதினைந்து ரூபாய் செலவாகும். ஆனால் ஹோட்டல் சரவண பவனின் ஒரு காபியின் விலை என்ன தெரியுமா ? ரூ.22. அது மட்டுமல்ல பார்சல் வாங்கினால் கப் ஒன்றுக்கு ரூ.2 கூடுதலாக கொடுக்க வேண்டும்.
இன்று காலையில் சரவணபவனின் ரெகுலராக டீ சாப்பிடும் ஒரு வாடிக்கையாளர் இரண்டு பார்சல் டீ வாங்கியுள்ளார். ஒரு டீ ஒன்றின் விலை ரூ.22, இரண்டு டீயின் விலை ரூ.44, இரண்டு கப் விலை ரூ.4, மொத்தம் ரூ.48. ஆனால் டீ கப் ஒன்றை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. கப் அளவில் பாதி தான் டீ இருந்தது. மீதி காலியாக இருந்தது. ரூ.7 கொடுத்து வாங்கும் டீயே முழு அளவில் இருக்கும் நிலையில் சரவண பவனில் ரூ.22 கொடுத்தும் பாதி கப் தான் இருந்தது என்றால் அந்த வாடிக்கையாளர் எவ்வளவு நொந்து போயிருப்பார் என்று நினைத்து பாருங்கள்.
அந்த வாடிக்கையாளர் நம்மை தொடர்பு கொண்டு அந்த டீயின் புகைப்படத்தையும், பில்லின் பிரதியையும் அனுப்பி வைத்து தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார். இந்த செய்தி பொதுமக்களுக்கு போய் சேரவேண்டும் என்ற நோக்கத்திற்காக இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சென்ற மாதத்தில் இருந்து சரவண பவனில் விலை குறைப்பு செய்துள்ளார்களாம். காரணம் தற்போது முன்பு இருந்ததை போல பிஸினஸ் இல்லை என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சரவணபவன் ஹோட்டலை சன் டிவி குரூப் வாங்கப்போவதாக ஒரு வதந்தி ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது.
இப்படியே போனால் சன் டிவி வாங்கினாலும், வாங்காவிட்டாலும், கூடியவிரைவில் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து சரவண பவன் தவிக்கப் போவது மட்டும் உண்மை.
தகவல் : காதர் ஹுசைன் நன்றி : http://india.vannimedia.com/ Engr.Sulthan
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home