24 December 2013

உடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.



ஓவர் வெயிட் உயிருக்கு ஆபத்து. உங்கள் இடுப்புப் பெல்ட் பெருக்கப் பெருக்க உங்கள் ஆயுள் குறைகிறது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. உடல் எடையைக்குறைக்க 100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள் என்ற நூலில் இருக்கும் தகவல்கள் இதோ !
01. உப்பு உடலை உப்ப வைக்கும், உப்பை அளவோடு சாப்பிடுங்கள்.
02.
நொறுக்குத் தீனி சாப்பிடுவதை அறவே விட்டுவிடுங்கள்.
03.
தினமும் குறைந்தது நாலு கி.மீ. நடவுங்கள்.
04.
கொழுப்பு சத்துள்ள உணவை தவிருங்கள்.
05.
இனிப்பு, மாவு, மசாலா, எண்ணெய்ப் பொருட்களை சாப்பிட வேண்டாம்.
06.
பசிக்காத போது சாப்பிட வேண்டாம்.
07.
உணவை அளவோடு சாப்பிடுங்கள். சுவை கருதி உணவை ஒரு பிடி பிடித்துவிடாதீர்கள்.
08.
குளிர்ந்த நீர், மோர் என்பவற்றைக் குடியுங்கள்.
09.
எடை கூடிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்.
10.
உங்கள் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால் ஆயுளில் 13 சத வீதம் குறையும்.
11.
பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது, உடலுக்கு கெடுதலே வரும்.
12.
ஒழுங்கு முறையாக தேகப்பயிற்சி செய்யுங்கள்.
உங்கள் உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு.
காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது. இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவமாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home