டிசம்பர் 3 வரலாறு
டிசம்பர் 3, 1984 - போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் மெதில் ஐயோனைட் வாயு கசிந்ததில் 5,000-க்கு மேற்பட்டோர் இறந்தனர். 6 லட்சம் பேருக்குக் பாதிப்பு. இந்தியாவையே உலுக்கிய இந்த சோகம் சம்பவம் நிகழ்தது இன்று தான்.
Sakthi
Sundar அண்டர்சன் எங்கே அமெரிக்கவில் நிம்மதியாக ஓய்வு எடுக்கிறார் அவரும்
குவத்ரோச்சி போலவே இயற்கையாக தன் வாழ்வினை அனுபவித்து பின்பு இறந்து போவர்
. அவர்களை தப்பிக்க விட்ட அந்த தேசியவாதியின் நினைவு நாளினை பயங்கரவாத எதிரிப்பு
நாளாக அனுசரித்து கொண்டிருக்கிறோம்
எல்லாம் நமது நேரம். யார் இங்க பயங்கரவாதிகள் என்பதற்கு நம் அரசியல்
சாசனத்தில் என பொருள் இருக்கிறது என்பது சத்தியமாக பாமர்களுக்கு புரிவதில்லை
.அணுகுண்டு அளவுக்கு ஆபத்து ஏற்படுத்தி 1000
பொதுமக்களின் உயிரை எடுத்தவன? குற்றவாளியை தப்பிக்க விட்டவனா ?
இப்பொழுதும் தன் கடமையை செய்ய
தயங்குபவனா? எ.கே 47 ரக துப்பாக்கி வைத்திருந்து பரோலில் வந்து படத்தில் நடிகின்றவனா
? அல்லது 9 வோல்ட் பேட்டரி பில்லை வைத்திருந்து தூக்கு கையிரை எதிர் கொண்டிருபவனா ???
இந்த ஜனநாயகம் தான் இதை முடிவு செய்ய
வேண்டும்
நிகழ்வுகள்
1592 - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற
ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின்
காலியை வந்தடைந்தது.
1795 - ஜான் ஜார்விஸ்
யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக
(Collector) நியமிக்கப்பட்டார்.
1800 - மியூனிக் அருகில்
ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில்
இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள்
ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.
1818 - இலினோய் ஐக்கிய
அமெரிக்காவின்
21வது மாநிலமானது.
1854 - ஆஸ்திரேலியாவில்
விக்டோரியாவில் பல்லராட் என்ற
இடத்தில் தங்கச் சுரங்கத்
தொழிலாளர்கள் நடத்திய
ஆர்ப்பாட்டத்தின் போது படையினர்
சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903 - சேர் ஹென்றி பிளேக்
ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை
வந்து சேர்ந்தார்.
1904 - வியாழனின் ஹிமாலியா
என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின்
என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1912 - பால்கன் போரை
முடிவுக்குக் கொண்டுவரும்
நோக்கில் பல்கேரியா , கிரேக்க நாடு
, மொண்டெனேகிரோ , மற்றும்
சேர்பியா ஆகியன துருக்கியுடன்
போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
1917 - 20 ஆண்டுகள் கட்டுமானப்
பணியின் பின்னர் கியூபெக் பாலம்
திறக்கப்பட்டது.
1944 - கிரீசில்
கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச
படைக்கும் இடையில் உள்நாட்டுப்
போர் வெடித்தது.
1967 - தென்னாபிரிக்காவின் கேப்
டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட்
தலைமையில் உலகின் முதலாவது
இருதய மாற்றுச் சிகிச்சை 53
வயது லூயிஸ்
வாஷ்கான்ஸ்கி என்பவர்
மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 - இந்திய-பாகிஸ்தான் போர், 1971 :
இந்தியா கிழக்கு பாகிஸ்தானை
முற்றுகையிட்டது. முழுமையான
போர் ஆரம்பித்தது.
1973 - வியாழனின்
முதலாவது மிக அருமையான
படங்களை பயனியர் 10 விண்கலம்
பூமிக்கு அனுப்பியது.
1976 - ரெகே பாடகர் பொப் மார்லி
இரு தடவைகள் சுடப்பட்டுக்
காயமடைந்தார். ஆனாலும் இவர்
இரு நாட்களின் பின்னர்
இசை நிகழ்ச்சியில்
கலந்து கொண்டார்.
1978 - வேர்ஜீனியாவில் பயணிகள்
ரயில் ஒன்று தடம் புரண்டதில்
6 பேர் கொல்லப்பட்டு 60 பேர்
காயமடைந்தனர்.
1984 - இந்திய நகரான போபாலில்
யூனியன் கார்பைட் நிறுவனத்தில்
இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில்
3,800 பொது மக்கள் உடனடியாகக்
கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர்
வரையில் காயமடைந்தனர். (இவர்களில்
6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்).
உலகில் இடம்பெற்ற மிக மோசமான
தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1989 - மால்ட்டாவில் இடம்பெற்ற
பேச்சுவார்த்தைகளை அடுத்து
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.
டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர்
மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர்
பனிப்போர் முடிவடையும் கட்டத்தில்
உள்ளதாக அறிவித்தனர்.
1997 - நிலக் கண்ணிவெடிகளைத்
தயாரிப்பது, மற்றும்
பயன்படுத்துவது தடை செய்யும்
ஒப்பந்தத்தில் 121 நாடுகள்
ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்கா , ரஷ்யா, சீனா ஆகியன
இவ்வொப்பந்தத்தில்
கையெழுத்திடவில்லை.
1999 - செவ்வாய்க்
கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar
Lander இன் தொடர்புகளை நாசா
இழந்தது.
பிறப்புகள்
1795 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல்
சேவையைக் கண்டுபிடித்தவர்,
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)
1884 - ராஜேந்திர பிரசாத்,
இந்தியாவின்
முதலாவது ஜனாதிபதி (இ. 1963 )
இறப்புகள்
1552 - புனித பிரான்சிஸ்
சவேரியார் , மதப் போதகர் (பி. 1506 )
சிறப்பு நாள்
அனைத்துலக ஊனமுற்றோர் நாள்
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home