3 December 2013

எயிட்ஸ் தினம் பற்றிய இஸ்லாமிய பார்வை!



எயிட்ஸ் தினம் டிசம்பர் -1 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் கொடூரத்தன்மையில் இருந்து உலகம் மீட்சிபெறுவதற்கு மேற்கினால் முன்வைக்கப்படும் எந்தத் தீர்வும் இதுவரை பலனளித்ததாக சான்றுகள் இல்லை. காரணம் இவர்கள் மனோ இச்சையின் அடிப்படையிலான சமூக கட்டமைப்பைவடிவமைத்து சுதந்திரம்எனும் எண்ணக்கருவினூடாக மக்களை வழிதவறச்செய்வதுடன் தாராண்மை வாதச் சிந்தனையின்அடிப்படையில் சகலவிதமாக அநாச்சாரங்களையும் அரங்கேற்றி முதலாளிகளது நலன்கள்காக்கப்படுவதனை உறுதிசெய்கிறார்கள்.

மேலும் மனிதனை மிருகத்திலும் கேவலமான நிலைக்கு இட்டுச் செல்லும் படியான சட்டங்களை தாங்கள் வகுத்த சுதந்திரம் பற்றிய எண்ணக்கருவினூடாக விதைக்கிறார்கள்.

தன்னினச் சேர்க்கையினாலும்” “தகாத பாலியல் உறவினாலும்” “போதை வஸ்த்துப் பாவனையினாலுமேபெருந்தொகையான மக்கள் இந்த எயிட்நோயின் கொடிய தாக்கத்திற்கு உட்படுவாதாக WHO அறிக்கையிடுகிறது.

உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கான சில புள்ளிவிபரம்...
1.WHO வின் 2010 அறிக்கையின் படி அமெரிக்காவில் 1.3 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை தகாத பாலியல் உறவு மற்றும் போதைவஸ்த்து பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஐரோப்பாவில் 2.3 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

3. ஆசியாவில் சுமார் 5 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிப்புற்றுள்ளார்கள்.

4. அதே நேரம் 2011 ஆண்டின் புள்ளி விபரப்படி HIV ஆல் பாதிக்கப்பட்ட உலகமக்கள் தொகை 34 மில்லியன் என்பது WHO வினது தகவலாகும்.

இவ்வாறான இழிநிலையில் இருந்து உலகம் மீட்சிபெறவேண்டுமாயின் மனிதன் பிரபஞ்சங்களின் அதிபதியான ரப்புல் ஆலமீனுடைய வாழ்வியல் ஒழுங்கையும், வழிகாட்டலையும்தமது வாழ்வில் எடுத்தொழுகினால் மாத்திரமே உலகின் இந்த இழிநிலையில் இருந்து மீட்சி பெறமுடியும்.

இவ்வாறான இறைவனது வாழ்வியல் ஒழுங்கை உலகில் மீண்டும் நடைமுறைப்படுத்தத் தேவையான சகல அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்ட இஸ்லாமிய தலைமை நபி வழியில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்”.

இதற்கு இஸ்லாம் பற்றிய சிந்தனைத்தெளிவையும் அது வாழ்வின் அனைத்துக்குமான தீர்வைக் கொண்ட வாழ்க்கைச் சித்தாந்தமாக உலகில் தஃவா முன்னெடுப்புக்கள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். அதன் வாழ்வியல் முன்மாதிரிகளை தமது வாழ்வில் எடுத்தொழுக ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் யுவதியும் திடசங்கட்ப்பம் பூணவேண்டும். மேற்கினது வாழ்க்கை முறையில் உள்ள மாயையுள் மாட்டிச் சீரழிந்து நிம்மதி இழப்பதனை கைவிட வேண்டும். இஸ்லாத்தை வாழ்வின் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home