3 December 2013

டெபிட் கார்டு பயன்படுத்தினால் பின் நம்பர் பதிவு கட்டாயம் – இன்று முதல் அமல்!



கடைகளில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்கும்போது டெபிட் கார்டு பயன்படுத்தினால் பின் நம்பர் பதிவு கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலாகிறது.
வர்த்தக நிறுவனங்களில் டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது, இனிமேல் பின் நம்பர் (ரகசிய பாதுகாப்பு எண்) பதிவு செய்வது கட்டாயமாகிறது. மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கையை வங்கிகள் எடுத்துள்ளன. கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது, அதற்கான பணத்தை, “டெபிட் கார்டுமூலம் ஏராளமானவர்கள் செலுத்துகின்றனர். டெபிட் கார்டு கொடுக்கும் போது கடைக்காரர் அந்த கார்டை தங்களிடம் உள்ள அதற்கான கருவியில் ஸ்வைப் செய்து, உரிய பணத்தை தங்களது கணக்கில் சேர்த்துக் கொள்கின்றனர்.
கார்டு ஸ்வைப் செய்யும் போது, அதற்கான ரசீதில் மட்டும் கார்டுதாரர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றனர். அப்போது, டெபிட் கார்டின் பின் நம்பர் பதிவு செய்யத் தேவையில்லை. இப்படி, ஸ்வைப் செய்த பிறகு வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது, வங்கி கணக்கை பார்க்கும்போது அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திருடப்பட்ட டெபிட் கார்டில் மோசடி செய்வதும் அதிகரித்தது. இது தொடர்பாக வங்கிகளுக்கு புகார்கள் குவிந்தன.
இது போன்ற சைபர் கிரைம் செயலை தடுக்க, டெபிட் கார்டை பயன்படுத்தும்போது, அதற்கான பின் நம்பரையும் பயன்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. டெபிட் கார்டு பயன்படுத்தும்போது, பின் நம்பரை பஞ்ச் செய்யும் (ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது பயன்படுத்தப்படும் பின் நம்பர்) நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடைக்காரரிடம் டெபிட் கார்டை கொடுத்ததும் அவர், அதற்கான கருவியில் முதலில் ஸ்வைப் செய்வார். பின்னர் ரூபாய் எவ்வளவு என்பதை பதிவு செய்வார். இதையடுத்து, அந்த கருவியில் டெபிட் கார்டின் உரிமையாளர் பின் நம்பரை பதிவு செய்வார். இதன்பின்னர் இந்த பரிவர்த்தனை நிறைவு பெறும்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home