ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!!
தொப்பையில்லாத வயிற்றுடன் இருப்பது
நேர்மறையான எண்ணங்கள் மற்றும் உடல்
மொழியை வெளிப்படுத்தும் சிறந்த வழிகள்
என்பதை ஆண்கள் யாரும் மறுக்கப்
போவதில்லை. அது ஆரோக்கியமான எண்ணங்களை
உருவாக்கி, மற்றவர்கள் ஏற்றுக்
கொள்ளும் வகையில் உங்களையும் கொண்டு
சேர்க்கும். ஒரு பெரிய தொப்பையுடன்
இருக்கும் ஆணை பொதுவாக யாரும்
விரும்பமாட்டார்கள். அர்ப்பணிப்பு உணர்வும்,
ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் நமக்கு
தொப்பையை குறைத்து அழகான வயிற்றைத்
தரும். எந்த ஒரு மனிதரும் நல்ல
உடலமைப்பையும், தட்டையான வயிற்றையும்
வைத்திருப்பது பலரை கவரக் கூடியதாக
இருக்கும். ADVERTISEMENT ஒருவேளை உங்களுக்கு நடுத்தர அளவில் தொப்பை இருந்தாலோ, மிகவும் பெரிதாக தொப்பை இருந்தாலோ அந்த கொழுப்பை குறைக்க இப்போதே முயற்சிக்க
வேண்டியது அவசியமாகும். முதலில் எளிய முறையில் முயற்சியைத் துவங்க
வேண்டும். எளிய முறையில் அட்டவணையிட்டு உணவுமுறைகளில் கட்டுப்பாட்டையும்
மற்றும் எளிய உடற்பயிற்சிகளையும் துவங்க வேண்டும். பயிற்சியின் நேரத்தை
நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது உங்கள்
உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் கொழுப்பு கரைந்த தன்மையை உணரும் போது
உங்களுக்குள் ஒரு புத்துணர்வை நீங்கள் உணருவீர்கள். உங்கள் உடம்பும் ஆரோக்கியமாக
மாறுவதை உணருவீர்கள்.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை
குறைத்து ஊட்டச்சத்து நிறைந்த பிற
உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது
சிறந்தது. உடலில் உள்ள கொழுப்பை குறைத்து
மெல்லிய உடலை கொண்டு வரும் பல உணவு
வகைகள் உள்ளன. வெள்ளை அரிசியைத்
தவிர்த்து பழுப்பு அரிசியை
பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பழுப்பு
அரிசியும், கோதுமை ரொட்டியையும்
உண்டால் உங்கள் உடலுக்கு மெதுவாகவும்
நிலையாகவும் சக்தி கிடைக்கின்றது.
இதனால் பசி வருவதையும் தள்ளிப் போடலாம்.
முட்டையின் வெள்ளை கரு பகுதியை காலை
உணவுடன் உண்பது தொப்பையை வெகுவாக
குறைக்க உதவுகின்றது.
1 Comments:
Nice article, good information and write about more articles about it.
Keep it up! Keep writing
https://www.biofact.in/
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home