27 December 2013

WINDOWS 7 :சின்ன சின்ன பயன்கள்...!



விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .

கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7 ல் ஒரு வசதி உள்ளது .

கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .

Windows 7 ல் இன்னொரு வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்க முடியும்
உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும்ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1 F6 இது போன்ற கீகளை பயன்படுத்தியும்ஷார்ட் கட் அமைக்கலாம் .

விண்டோஸ் 7 ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .

இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .

TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .

நன்றி,
முக்கிய செய்திகள்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home