24 December 2013

வயதான குழந்தைகளின் இல்லம்....+இரத்தம் மூன்று நிறம்!



வயதான குழந்தைகளின் இல்லம்....

முந்நூறு நாள்
மடி சுமந்து பெற்றெடுத்தேன்
முப்பது வருடம்
கழித்து தத்துக் கொடுக்கிறான்
என்னை
முதியோர் இல்லத்திற்கு .....

தாய்க்குப் பின் தாரம் என்றாய்
தாரம் வந்ததும் தாரை வார்க்கிறாய்..
என்னை
முதியோர் இல்லத்திற்கு.....

கல் சுமந்து உன்
கனவை நவனாக்கினேன்
கடமைக்கென்று வருகிறாய் ,
என்னைப் பார்க்க
முதியோர் இல்லத்திற்கு ....

மார் விட்டு இறக்கியதில்லை
என் மகனை
மாதம் தவறாமல் அனுப்புகிறான்
பணம் எனக்காக
முதியோர் இல்லத்திற்கு .....

***************************
இரத்தம் மூன்று நிறம்!
இரத்தம் என்பது சிகப்பு நிறத்தில் இருக்கும் என்பது மட்டுமே நாம் அறிவோம். ஆனால் இரத்தத்தில் மூன்று விதமான செல்கள் தனிதனி வண்ணத்தில் இணைந்திருக்கின்றன என்பது தெரியுமா உங்களுக்கு? அப்படி இணைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலை செய்கின்றன என்பதும் உண்மை.
இரத்தம்சிவப்புகிளிபச்சை மற்றும் மஞ்சள் நிறங்களென்று மூன்று நிறங்களையும் தன்னுள்ளே கொண்டது அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், இரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் என்பவை அவை. இருப்பினும், இரத்தம் பொதுவாக சிவப்பு நிறத்தை மட்டும் நமக்கு காட்டுகிறது. 
இரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது.
வெள்ளை அணுக்கள் இராணுவ வீரர்களைப் போன்று செயல்படுபவை. உடலில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை தடுத்து, அழிப்பது என்ற பணிகள் கொண்டவை.
இரத்தத்தை உறைய வைக்கும் செல்களோ நமக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசியும்போது, அடுத்த சில நிமிடங்களிலேயே இரத்த கசிவை உறைய வைத்து, இரத்தப் போக்கை நிறுத்தும் தன்மைக் கொண்டவை. இரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் இந்தச் செல்கள்பிளேட்லெட்ஸ்’ (கிளிபச்சை) என்று அழைக்கப்படுகின்றன.
இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாஎனப்படும் மஞ்சள் நிற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் கண்டெய்னர்பெட்டகங்களாக செயல்படுகின்றன.
தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக இரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியேப் பிரித்து பாதுகாக்கும் முறை வந்துவிட்டது அதாவது இரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, இரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அவற்றை பாதுகாத்து வைக்கலாம். இரத்த வங்கிகள் தாங்கள் பெறும் ரத்தத்தில் 85 விழுக்காடு இரத்தத்தை இப்படி பிரித்துத்தான் பாதுகாக்கின்றன.
இரத்தம் தேவையுள்ளோருக்கு அவர்களின் தேவைகளையொட்டி கொடுத்தாலே போதுமானது. உதாரணமாக, ‘ஹ்யூமோக்குளோபின்குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு சிவப்பணுக்கள் மட்டுமே போதுமானவை. தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு பிளாஸ்மாசெல்கள் மட்டுமே தேவை. அதேபோல, விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் இருந்தால் போதுமானது.

 


அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home