ரத்தக் கொதிப்பு எதனால் வருகிறது? எப்படி கட்டுக்குள் வைப்பது?
இதற்கு காரணமும் நமது உணவுப் அழைக்க வழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டு விட்டது தான் என்று நிபுணர்கள் கருத்துக் கூறினாலும், ரத்த கொதிப்பு எதனால் வருகிறது, எப்படி கட்டுக்குள் வைக்கலாம், இதன் அறிகுறிதான் எப்படி இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர் கூறும் கருத்துக்களை கேட்போம்...
ரத்த கொதிப்பு என்பது சைலண்ட் கில்லர் டிசீஸ் என்று கூட சொல்லப் படுகிறது என்றும், இதற்கு அறிகுறிகள் என்பது இல்லாமல் கூட அதிரடியான ஹார்ட் அட்டாக்கை கூட விளைவிக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்தாக உள்ளது. உடலில் நல்ல கொழுப்பு குறைந்து, கெட்ட கொழுப்பு கூடும்போது, ரத்த நாளங்கள் வீங்கி அடைப்பு ஏற்பட்டு ரத்தக் கொதிப்பு உண்டாகும். அல்லது சிறுநீரகத்தில் உப்பு அதிகமாக சேரும்போது ரத்த கொதிப்பு உண்டாகும். இந்த ரத்த கொதிப்பு திடீர் மாரடைப்பு, அல்லது பக்கவாதம், அல்லது முக வாதம் என்று பல்வேறு அபாயத்தை உண்டாக்கும்.
இதை எப்படி கட்டுக்குள் வைத்துக் கொள்வது என்றால், உங்களது மருத்துவ நிபுணர்கள் கூறும் எந்த மருத்துவ நிபுணர்கள் என்றாலும் சரி, அதாவது நவீன மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்று எந்த துறையை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் என்றாலும் அவர்கள் தரும் மருந்துகளை தவறாமல் கடைப்படிக்க வேண்டும். அதோடு வெந்தயம், பூண்டு, சிறிய வெங்காயம், சீரகம் போன்ற பொருட்கள் சேர்ந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதிக உப்பு, எண்ணெய், கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
தினமும் காலையில் உணவுடனோ அல்லது சீரகம், மிளகு, சிறிய வெங்காயம், பூண்டு சேர்ந்த சூப்பாகவோ முருங்கை கீரையைப் பயன்படுத்தி உண்டு வந்தால், ரத்த கொதிப்பைக் கட்டுக்குள் வைக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home