21 December 2013

அண்டார்டிகா பனி கடலின் அடியில் வைர சுரங்கம்!



அண்டார்டிகா பனி படர்ந்த பிரதேசம். இங்குள்ள கடல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பனிக்கட்டிகளால் மூடிக்கிடக்கிறது. இருந்தும் அங்கு பல நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தின் மண்ணியல் நிபுணர் டாக்டர் டீல் ரிலே தலைமையிலான அண்டார்டிகா சர்வே குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது, அங்குள்ள மெரிடித் மலையில் கிம்பர்லிட் எனப்படும் நீலநிற பாறைகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

இவை தான் வைரமாக மாறக்கூடிய திறன்படைத்தது. பொதுவாக வைரம் தூய கார்பனால் உருவாகிறது. பூமிக்கு அடியில் 150 கி.மீட்டர் ஆழத்தில் பாறைகளில் ஏற்படும் கடுமையான அளவுக்கு மீறிய வெப்பத்தால் இவை தோன்றுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, சைபீரியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கிம்பர்லிட் பாறைகள் தான் வைரமாக மாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்டார்டி காவின் கடலுக்கு அடியில் ஐஸ் கட்டிகள் உறைந்து கிடக்கும் கிம்பர்லிட் பாறைகளின் மூலம் இங்கும் வைர சுரங்கங்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே, அங்கு வைரசுரங்கங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. ஆனால் அண்டார்டிகாவில் சர்வதேச நாடுகள் சுற்று சூழல் அறிவியல் குறித்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ள முடியும் என கடந்த 1991–ம் ஆண்டு ஐ.நா.வில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, தற்போது அங்குள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியாது. 2041–ம் ஆண்டுக்கு பிறகே ஆய்வு செய்ய முடியும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home