20 December 2013

இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை



இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை (முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். – Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி) உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம். நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக்கேட்டேன். அவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை! ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார். தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித பயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை! "நீங்கள் பைபிளைப் படிப்பது போல உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்!" என்னால் நம்பவே முடியவில்லை! அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம். மறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன்? ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை! இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது. இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்? "இது வேறோரு கடவுள்", "பொய்யான கடவுள்" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது. கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார். விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை! மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை. என்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்பவர் யார்? கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை! மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன். முஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை! இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும். இஸ்ரவேலர்களே! கேளுங்கள்! இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும்.இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29) பிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன். மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன். நான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது. நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள்! ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு இறைவா! நீ ஒருவனே! நீயே உண்மையான இறைவன்என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை. இதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை! நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். "நீர் கூறும்: மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கே யாதோர் இணையுமில்லை இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் முஸ்லிம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)" (அல்-குர்ஆன் 6:162-163) சகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்
.
வலையுகம் அபு யூஸுப்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home