லோக்பால் மசோதாவில் முக்கிய அம்சங்கள் : பிரதமரையும் விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்
டெல்லி: மக்களவையில் கடும்
அமளிக்கிடையே லோக்பால் மசோதா நிறைவேறியது. முன்னதாக லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லோக்பால் மசோதா கடும் அமளிக்கிடையே நிறைவேறியது. இரு
அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து
லோக்பால் மசோதா சட்டமாகிறது. திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் என்னென்ன முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது
குறித்தும், பழைய மசோதாவில் அது எப்படி இருந்தது என்பது குறித்தும்
விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1. லோக் அயுக்தா: லோக் அயுக்தா நீதிமன்றங்களை எல்லா மாநில அரசுகளும் ஓராண்டுக்குள் அமைக்க வேண்டும். அதன் வகைகள் மற்றும் அமைப்புகளை மாநில அரசுகளே நிர்ணயித்து கொள்ளலாம்.
முந்தைய மசோதாவில், லோக் அயுக்தா நீதிமன்றங்களை அமைக்க, மாநில அரசுகள் ஒப்புதல் மட்டுமே தரலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல், மாநிலங்களில் லோக் அயுக்தாக்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய மசோதாவில் இந்த அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2. லோக்பால் சட்டம்: லோக்பாலில் ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சம் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் 50 சதவீதம் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாகவும், மீதமுள்ள 50 சதவீதம் உறுப்பினர்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மை மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முந்தைய மசோதாவில், லோக்பால் தலைவராக நாட்டின் தலைமை நீதிபதி இருப்பார் அல்லது தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதித்துறை சாராத எனினும், அதற்குரிய தகுதிபெற்றவர்கள் (தலைமை நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி) இருப்பார்கள்.
3. லோக்பால் தேர்வு: தேர்வுக்குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோர் இருப்பார்கள். லோக்பால் தேர்வுக்குழுவின் 5வது உறுப்பினராக, பிரபல நீதிபதி என்று ஏற்கனவே இக்குழுவில் இருக்கும் 4 பேரால் பரிந்துரைக்கப்படும் நபரை ஜனாதிபதி நியமிப்பார். முந்தைய மசோதாவில் ஜனாதிபதி தன்னிச்சையாக முடிவு செய்து 5வது உறுப்பினரை நியமிப்பார்.
4. மத அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள்: புதிய மசோதாவில் அமைப்புகள், அறக்கட்டளைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது பொது நிதியை பெறுவது, வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவது, குறிப்பிட்ட அளவுக்கு வருவாயை கொண்டவை ஆகிய அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், மதம் மற்றும் பொதுக் காரியங்களுக்கான அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு புதிய லோக்பால் மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பழைய மசோதாவில், குறிப்பிட்ட ஆண்டு வருவாய் கொண்ட அமைப்புகள், அறக்கட்டளைகள், வெளிநாட்டில் இருந்து ரூ.10 லட்சத்துக்கு மேல் நன்கொடை பெறும் நிறுவனங்களும் பொது பணியாளர்கள் என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருந்தன.
5. வழக்கு: விசாரணை அறிக்கையின்பேரில் ஒரு வழக்கை பதிவு செய்ய, முடிவு எடுப்பதற்கு முன்பாக, லோக்பால் நிர்வாகம் தன்னுடைய சட்டக் குழு அல்லது சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கும்.
முந்தைய மசோதாவில், லோக்பால் அமைப்பின் புலனாய்வு அமைப்புதான் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யும்.
6. மத்திய புலனாய்வு விசாரணை: சிபிஐ சுதந்திரமான அமைப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, புதிய மசோதாவில் வழக்கு களுக்கான இயக்குனரை நியமிக்க வகை செய்கிறது. வழக்குகளுக்கான இயக்குனர், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் பரிந்துரையின்பேரில் நியமிக்கப்படுவார்.
லோக்பால் அனுமதிக்கு பின்னரே, இந்த அமைப்பின் மூலமான வழக்குகளை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரிகளின் இடமாற்றம் செய்ய முடியும்.
7. விசாரணை: அரசு ஊழியர்கள் மீதான வழக்கு குறித்து லோக்பால் விசாரணை நடத்த முடிவு செய்யும் முன்னரே, அவரிடம் விசாரணை நடத்தப்படும்.
8. பிரதமர்: லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமரும் அடங்குவார். பிரதமருக்கு எதிரான வழக்குகளில், சில விவகாரங்கள் மற்றும் குறிப்பிட்ட பணிகளில் விலக்கு அளிக்கப்படும்.
9. புலனாய்வு: வழக்குகளில் விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இதேபோல் புலனாய்வு 6 மாதங்களுக்குள் முடிய வேண்டும். அரசு ஊழியர்கள் மீதான புகார்களில் விசாரணைக்கு பின்னரே புலனாய்வுக்கு உத்தரவிட வேண்டும்.
பிரதமர் மீதான புகார்கள் லோக்பாலின் 3ல் 2 பங்கு அமர்வாளர்களின் ஒப்புதலுக்கு பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். அவரிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.
10. அபராதம்: தவறான மற்றும் போலியான புகார்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். பொது ஊழியர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தவறான குற்ற நடவடிக்கை, தொடர்ந்து ஊழல் ஆகியவற்றுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். -
-அஷ்ரப்1. லோக் அயுக்தா: லோக் அயுக்தா நீதிமன்றங்களை எல்லா மாநில அரசுகளும் ஓராண்டுக்குள் அமைக்க வேண்டும். அதன் வகைகள் மற்றும் அமைப்புகளை மாநில அரசுகளே நிர்ணயித்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home