இளநரையை தடுக்க இதை ட்ரை பண்ணுங்க
இளநரையை தடுக்க இதை ட்ரை பண்ணுங்க
எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நரை
என்றாலே அலர்ஜிதான். இளமையிலேயே தலைமுடி
நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான்.
ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே
மறக்கச் செய்துவிடும். மீண்டும் முடியை கருப்பாக்க என்ன செய்யலாம்
என்று ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில்
இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு,
அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம். நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்னையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும்.
அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது. நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும். தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும்.
அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும். கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம். ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.
பெண்களுக்கு முதலில் நரைக்குமா?
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்ய வேண்டும். தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம்.
இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. இரும்புச்சத்து அவசியம்?
தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் ஏ, ஒமேகா, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துகள் உணவின் வழியாக கிடைக்காமல் போய் விடும். ஊட்டச்சத்துகள் குறைந் தாலோ, உணவு முறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.
அஷ்ரப்நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம். நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்னையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும்.
அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது. நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும். தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும்.
அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும். கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம். ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.
பெண்களுக்கு முதலில் நரைக்குமா?
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்ய வேண்டும். தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம்.
இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. இரும்புச்சத்து அவசியம்?
தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் ஏ, ஒமேகா, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துகள் உணவின் வழியாக கிடைக்காமல் போய் விடும். ஊட்டச்சத்துகள் குறைந் தாலோ, உணவு முறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home