ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான கதை இது
.
பூமி மட்டுமா அதிர்ந்தது இல்லை கல்நெஞ்சம் கூட கண்நீர்விட்டது இது
சீனாவை உலுப்பிய பூம்மி அதிர்ச்சி அங்கு கடுமையான சேதங்களோடு நடந்து முடிந்த ஒரு பூமி அதிர்ச்சியின்
பின்னர், தொண்டர்கள் குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன
வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள். சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின்
சடலம் தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய சடலங்களிலிருந்து வித்தியாசமாக
இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக மண்டியிட்டிருப்பது போன்று
முழந்தாளிட்ட வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறது.அவளது இரு கைகளையும்
தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல் ஒன்று.இடிந்து விழுந்த
வீடு அவள் முதுகிலும் தலையிலும் ஆழமான காயங்களை ஏற்படுத்திய வண்ணம்
சரிந்திருக்கிறது. மிகுந்த சிரமத்துக்கு மத்தியில்
தொண்டர் அணியின் தலைவர் சுவரினூடே உள்ள குறுகலான இடைவெளிக்கூடாக தனது கைகளை
விட்டு அந்தப் பெண்ணின் உடலைத் தொட்டுப்பார்க்கிறார்.சிலசமயம் அந்தப்
பெண் உயிரோடிருக்கலாம் என்று மனதில் ஒரு நம்பிக்கை.ஆனால் குளிர்ந்து
விறைத்திருந்த சடலம் அவள் நிச்சயமாக இறந்து விட்டிருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது. தொண்டர் அணி அடுத்த இடிந்து விழுந்திருக்கும் கட்டடத்தை நோக்கி நடக்கிறது.குழுத்தலைவரின் உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. சொல்ல
முடியாதவொரு சக்தி மீண்டும் அந்த வீட்டை நோக்கி அவரை உந்தித்
தள்ளுகிறது.திரும்பவும் அவர் மண்டியிட்டு,குறுகலான வெடிப்புக்கூடே
அந்தப்பெண்ணுக்கு அடியில் இருக்கும் அந்தத் துணிக்குவியலை
கைகளால் தடவிப்பார்க்கிறார்.திடீரென’ இங்கே ஒரு குழந்தை,குழந்தை’ என அவர் துக்கம் மகிழ்வும் கலந்த உணர்ச்சிப்பெருக்கில் வீரிடுகிறார். தொண்டர் அணி ஒருங்கிணைந்து வேலை
செய்கிறது.சடலத்தை சுற்றியிருந்த இடிந்து விழுந்த சிதைவுகளை மிகக்கவனமாக
அகற்றுகிறார்கள்.தாயின் சடலத்திணடியில் இன்னும் உறக்கம் கலையாத மூன்று மாதப்
பிஞ்சுக் குழந்தை ,பூப்போட்ட ஒரு போர்வைத்துணிக்குள் பொதிந்து
கிடக்கிறது. தன் மகனைக் காப்பாற்றுவதற்காய் தாய் கொடுத்த விலை தான் இந்த அர்ப்பணம்.குழுத்தலைவர் அந்த பூவைக்கையில் எடுத்த போதும் அதன்
அமைதியான உறக்கம் கலையவில்லை. குழந்தையின் உடல் நிலையைச்
சோதிப்பதற்காக மருத்துவர் அவசரமாக வருவிக்கப்படுகிறார்.குழந்தையைச்
சுற்றியிருந்த பூத்துணியை திறந்த போது அதற்குள் ஒர் செல் தொலைபேசி
இருக்கிறது.அதன் முகப்பில் ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் – ” If you can survive,
you must remember that I love you.”( “உன்னால் வாழ முடிந்தால்,நான் உன்னோடு மிகுந்த
அன்போடிருக்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”). அந்த செல் மெசேஜை ஒருவர் மாற்றி ஒருவர்
வாசிக்கிறார்கள்.வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும் விம்மியழுகிறது.-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home