19 December 2013

பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் விவரங்கள்…!



இன்று அனைத்து வயதினரும் பயன்படுத்தும் பொது தளமாக பேஸ்புக் மாறிவிட்டது, முன்பெல்லாம் 18 முதல் 25 வயதுள்ளவர்களே அதிகம் இதை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்றோ நிலைமை அப்படியில்லை 18 வயது மகள் பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அந்த பெண்ணின் அப்பாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், அம்மாவும் பேஸ்புக்கில் இருக்கிறார்,
மேலும் இன்று 30 வயது முதல் 50 வயது உடையவர்களும் அதிக அளவில் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
மற்றும் சிலர் பெண்களை கவர்வதற்காகவே போலியான அக்கவுன்ட்களை ஆரம்பித்து தங்களது சித்து வேலைகளை காண்பித்துதான் வருகிறார்கள்,
சரி, அத விடுங்க பாஸ் நம்ம கதைக்கு வருவோம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி, தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் விபரங்கள்…!
உலக அளவில், மாதந்தோறும் இதனை 115 கோடியே 30 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 14.9% பேர் போலியானவர்கள். அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 9 லட்சம் ஆகும்.
இந்த பொய்யான அக்கவுண்ட்கள் மூன்று வகைப்படும். முதலாவதாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருத்தல். ஒரு சிலர் தங்களின் வசதிக்காகவும், என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தங்களுக்கு ஒரே பெயரிலும், அல்லது வேறு வேறு பெயரிலும் அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர்.
இது பேஸ்புக் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு முரணானதாகும். நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இது போல ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினைத் தடுக்க முடியவில்லை என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
அடுத்து 4.6% அக்கவுண்ட்கள் எந்த வகை என பகுத்தறிய முடியாதவையாக உள்ளது. சிலர் தங்கள் நிறுவனத்திற்காக என தனி மனித அக்கவுண்ட்களை உருவாக்கி இயக்குகின்றனர்.
அக்கவுண்ட்களை உருவாக்குகின்றனர். இவற்றை எந்த வகையில் பகுத்து வைப்பது என்பதனை எளிதில் முடிவு செய்திட முடிவதில்லை.
அடுத்ததாக, விரும்பத்தகாத அக்கவுண்ட்கள் 3.5% உள்ளன. இவை பேஸ்புக் நிறுவனம் விரும்பாத, தடை செய்திடும் பணிகளுக்கெனவே பொய்யான அக்கவுண்ட்களாக உருவாக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home