4 December 2013

சீனாவில் எழுச்சி பெற்ற இஸ்லாம்.....!!



சீனாவில் இஸ்லாத்தை ஒடுக்க அந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அல்லாஹ்வுடைய மகத்தான அருளால் பல்வேறு தடைகளைத் தாண்டி இஸ்லாம் அங்கு எழுச்சி பெற்று வருகின்றது.

சீன அரசாங்கம் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதற்குக்கூட பல கண்டிஷன்களைப் போட்டு அடக்குமுறை செய்து வரும் செய்திகளை ஊடகங்களில் கண்டு வருகின்றோம்.

முஸ்லிம்கள் உண்ணாமல் பருகாமல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது சீன அரசாங்கத்திற்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நோன்பு வைக்கக்கூட இவர்கள் தடைவிதித்த போதிலும் இஸ்லாம் அங்கும் எழுச்சி கண்டு வருகின்றது.

சீனாவிலுள்ள ஷான்க்காய் நகரத்தின் தென் மேற்குப் பகுதியான யீவு சிட்டி சீனர்கள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவும் ஒரு பகுதியாக உள்ளது.

தற்போது அந்த நகரத்தில் 35,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கின்றனர்,

2000 ஆண்டு வாக்கில் இங்கு 100 முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுத்து தொழுது வந்தனர். தற்போது அங்கு மிகப்பெரிய பள்ளிவாசல் எழுப்பப்பட்டுள்ளது.

அந்த பள்ளியின் இமாம் ஐசின் கியொரொ அவ்குஆன் கூறுகையில்...

வரும் காலங்களில் நிச்சயம் இஸ்லாம் இந்த பகுதியில் வேகமாக வளரும் (இன்ஷா அல்லாஹ்) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி நேஷனல் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாத்திக நாடான சீனா 5 மதங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது. புத்திஸம், இஸ்லாம், புரோட்டஸ்டன்ட், கத்தோலிக், தாவோஇஸம் ஆகிய 5 மதங்களையும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கின்றது.

அதிகாரப்பூர்வமாக 22 மில்லியன் முஸ்லிம்கள் சீனாவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவில் வசிக்கும் முஸ்லிம்களின் கணக்குப்படி 65 முதல் 100 மில்லியன் வரை முஸ்லிம்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதாவது சீனாவில் 7.5 % முஸ்லிம்கள் வசிப்பதாக அங்குள்ள முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home