நூதன முறையில் மல்டி ரீசார்ஜ் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி
சென்னை: அரும்பாக்கத்தை சேர்ந்தவர்
ராகேஷ் (34). செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ்
கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறியதாவது:அரும்பாக்கத்தில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி
வருகிறேன். என்னை நரேஷ் கிருஷ்ணா (30) என்பவர் கடந்த
மார்ச் மாதம் அணுகினார். தான் பெருங்குடியில் உள்ள மொபைல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் இருந்து வருகிறேன். எங்களது நிறுவனம் “மல்டி ரீசார்ஜ்’’
என்ற பெயரில் ரீசார்ஜ் கூப்பனை அறிமுகம்
செய்துள்ளது. ஒரே செல்போனில்
இருந்து அனைத்து செல்போன் நிறுவன போன்களுக்கும் ரீசார்ஜ் செய்யலாம் என்று கூறினார். இதற்கு முன்பணமாக ஸீ 25 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினர்.
இதை நம்பி முன் பணம் செலுத்தினேன். மேலும், 1 லட்சம் வரை பணம் கட்டி ரீசார்ஜ் கூப்பன் பெற்றேன். ஆனால், ரீசார்ஜ் ஆகவில்லை. இதுகுறித்து கேட்க சென்றால் நிறுவனத்தை சம்பந்தப்பட்டவர்கள் பூட்டி சென்று விட்டனர்.நிறுவனத்தில் பணி புரியும் அஸ்வின், அருண், நரேன், லியோ ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். என்னைப்போல் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். சென்னையில் ஸீ 2 கோடிவரை மோசடி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மேலும் 9 பேர் புகார் அளிக்க வந்திருந்தனர்.
-அஷ்ரப்இதை நம்பி முன் பணம் செலுத்தினேன். மேலும், 1 லட்சம் வரை பணம் கட்டி ரீசார்ஜ் கூப்பன் பெற்றேன். ஆனால், ரீசார்ஜ் ஆகவில்லை. இதுகுறித்து கேட்க சென்றால் நிறுவனத்தை சம்பந்தப்பட்டவர்கள் பூட்டி சென்று விட்டனர்.நிறுவனத்தில் பணி புரியும் அஸ்வின், அருண், நரேன், லியோ ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். என்னைப்போல் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். சென்னையில் ஸீ 2 கோடிவரை மோசடி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மேலும் 9 பேர் புகார் அளிக்க வந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home