21 December 2013

கூகிள் உருவான கதை.



ஷெல் என்பவர் 37 வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமேரிக்க நிருவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில்
ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் நிறுவனத்திற்கு பல லட்சம் டொலர் நஷ்ட்டம். தன் தவறு புரிந்தவுடன் தயங்கிக் கொண்டே நிறுவன உரிமையாளரிடம் விடயத்தைத் தெரிவித்தார்.

அவர்'அப்படியா,தாங்க்ஸ்!' என்றார்.
இந்த வித்தியாசமான கம்பெனி தான் கூகிள். அதன் வினோதமான உரிமையாளர் தான் லாரி பேj. தன் கல்லூரித் தோழர் செர்ji ப்ன்னுடன் சேர்ந்து கல்லூரி படிக்கும் போதே நிறுவனத்தை ஆரம்பித்தார். எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் 1 இன்டர்நெட் நிறுவனமாக வளர்ந்து

போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் இருக்கிறது கூகிள்.

லாரியும் செர்ஐjiயும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்பியூட்டர் வாங்கித் தங்கள் விடுதி அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு வாகனத் தரிப்பிடத்தை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் நிறுவனத்தை நடத்தினார்கள்.
கூகிளின் இன்றைய மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டொலரிற்கு மேல்.

கணிதத்தில் கூகால் (Googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப்பக்கங்கள் இருந்தாலும் தேடித்தந்து விடுவோம் என்ற என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப்பெயரே நிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் நிறுவனங்களுக்கு விற்கலாம் என முடிவெடுத்தனர். வாங்க யாரும் இல்லாததால் 1998ல் Google என்ற கம்பெனி உருவானது. 1998 நவம்பரில் தான் கூகிள் இணையத்தளம் முதன் முதலாக தலைகாட்ட தொடங்கியிருந்தது.

இன்று கூகிள் நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அனைவரும் பொறியியலாளர்கள். அவர்களுடைய கலிபோர்னியா அலுவலகத்திற்குச் சென்று பாரத்தால் ஏதோ பல்கலைக்கழக கட்டடத்திற்குள் நுழைந்து விட்டதைப் போன்று இருக்கும்.

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத்தேடல் இயந்திரமாக மட்டும் தான் இருந்தது. கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் வேலை, ஒரு நாள் சொந்த வேலை அதாவது, ஏதாவது புது சிந்தனை தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி வசதி செய்து தருகிறது. கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஒவ்வொருவரும் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான்.

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் பல குறைபாடுகள் காணப்பட்டன. கூகிள் தான் முதன் முதலாக பக்கங்களை தரப்படுத்தி புள்ளியிட்டு தேவையான தகவல்களை முதலில் கொண்டுவந்து தர ஆரம்பித்தது. பேஐj ராங்கிங் (Page Ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டு பிடித்தவர் லாரி பேஐj.
ஒரு வலைப்பக்கத்தை நிறையப்பேர் சிபாரிசு செய்து இணைப்புச்சங்கிலி போட்டு வைத்திருந்தால் அதிக புள்ளிகள் என்பது இதன் தத்துவம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னென்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். கூகில் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச நூலகம் நடத்துகிறார்கள்.

பறவை பார்வையாக செய்மதியிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள்.

உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஒரு வலைப்பக்கம் தேவையென்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக் கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும் மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். G-மெயில் தான் இப்போது அதிகம் நாடப்படுகிறது. எல்லா ஈமெயில் கம்பனிகளும் ஐம்பது மெகா பைட், நூறு மெகா பைட் இடம் தந்து கொண்டிருந்த போது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்தது. பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்த கொண்டே போகிறது.

ஆயிரக்கணக்கான x86 சேர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் இயக்குகிறார்கள். அவர்கள் வெப்செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, Current Version 2.1 அதாவது Apache ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.

கூகிள் சேர்வர்கள் 450,000ஐயும் இயக்க 20 மெகாவாட்டுக்கள் மின்சாரம் தேவையாம். அதாவது மாதம் கூகிளுக்கு மின்சாரப்பட்டியல்
2மில்லியன் டொலர்கள்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home