30 December 2013

உஹத் மலை



நீங்கள் பார்ப்பது உஹது மலையின் ஒரு பகுதி.
சற்று கவனமாக பாருங்கள் அந்த மலையின் நிறம் நமக்கு ஒன்றை ஞாபகப்படுத்தும். "அதுதான் தங்கம்".
இந்த மலைக்கு நிறைய நபிமொழிகள் உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)அவர்கள் , நற்செயல்களுடைய நண்மைகளின் அளவை சொல்லிக்காட்டும்போது
"உஹத் மலை அளவு" என்று இந்த மலையைத்தான் அளவுகோலாக வைப்பார்கள்.

காரணம்,மலை உயரம் நமக்கு பார்க்க முடிகிறது.அதனின் அடிவாரம் அல்லாஹு அறிந்தவன்.
நமக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தி;

நபியவர்கள் வயிற்றில் கல்லைக்கட்டி பசியுடனும் , நெருக்கடியுடனும் இருந்தபொழுது ,ஜிப்ரீல்(அலை)வந்து ,
நபியே..."சரி"ன்னு சொல்லுங்கள் .இந்த "உஹத் மலை" தங்களுக்கு தங்கமாக மாற்றப்படுமே...என்றார்கள்.
நபியவர்கள் அதை விரும்பவில்லை.
ஆனால் , 'அந்த சொல்'் அம்மலையை தங்கமாக மாற்றி விட்டது.

உண்மைதான்...

நாங்கள் 'அபூதாவூத்' வகுப்பில் இருக்கும்பொழுது ,ஹஜ்ஜுக்கு சென்றிருந்த ஹாஜிகளில் ஒருவர் "உஹத் " மலையின் பொடிக்கற்களை கொண்டு வந்து காட்டினார் .
சுப்ஹானல்லாஹ். அந்த கற்களில்் ஆங்காங்கே தங்கம் ஒட்டியிருந்ததை பார்த்தோம்.

அம்மலையை நேரில் சென்று பார்க்கும் பாக்கியத்தை அருளாளன் அல்லாஹு எமக்கும் தந்தான்.
(மேலும் மேலும் அல்லாஹு நம் எல்லோருக்கும் ஹஜ்ஜும், தரிசனமும் தருவானாக).

கவனிக்க :

இறுதி நாளில் 'செல்வத்தை எடுத்துக்கொண்டு ஏழையை தேடிப்போனால் ; அவன் "நேற்று தேவையுடையவனாக இருந்தேன்.
இன்று என்னிடம் செல்வம் குவிந்துள்ளது "என்பானாம்'.

இன்று , ருசியான உணவு , அழகான உடை , தங்கத்தின் விலை என்னதான் உயர்ந்தாலும் நம்மிடம் தங்கம் ஜொலிப்பது , செல்போன் ஏற்றத்துக்கு தக்க நமது ஏற்றம் . எல்லாம் "நாம் செல்வந்தராகிவிட்டோம்"என்பதின் அடையாளம்தான்.்
           

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home