27 December 2013

நிக்காஹ் என்னும் திருமணம்.....!!



நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் என்ற பெயரில் வெளிவரக்கூடிய திருமணம் எந்த வகையிலும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது. சினிமா என்பது மிகப்பெரிய மீடியாவாகும். அந்த மீடியாவை வைத்து சமூகத்துக்கு இயன்ற நல்ல விசயங்களை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தவறு இல்லை. பணம் பார்க்கும் ஒரே நோக்கத்திற்காக குறிப்பிட்ட மதத்தை துன்படுத்துவதையே தமிழக சினிமா ஆரம்பத்திலிருந்து ஈடுபட்டு வருவது நாடு அறிந்த ஒன்று... நிஜ வாழ்வில் முஸ்லிம்கள் அழகிய முறையில் தமிழ் பேசக்கூடியவர்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ... நிம்பிளிக்கி பொண்ணு தரான் நம்பிளிக்கி பணம் தரான் என்று சம்பந்தமே இல்லாத பாஷையில் முஸ்லிம்கள் பேசுவது போல் எம்.ஜி.ஆர் காலம் முஸ்லிம்களை இழிவுப்படுத்துவதும்... அதன் பிறகு விஜயகாந்த், கமல்ஹாசன், அர்ஜூன் போன்ற நடிகர்களின் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவதும்... அதன்பிறகு முஸ்லிம் பெண்கள் அந்நிய மத ஆண்களை காதலிப்பது போலும் அந்த காதலுக்கு பெற்றோர் மற்றும் முஸ்லிம்கள் எதிர்ப்பது போலும் தன்னுடைய மதத்தை விட கதாநாயகி நாயகனுடன் ஓடிப்போவதும் போன்ற படங்களை எடுத்து வருகிறார்கள். எந்த ரூபத்திலாவது முஸ்லிம்களை சீண்ட வேண்டும். அதனால் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு பரபரப்பாகி படம் நல்ல வசூல் வேட்டையை குவிக்க வேண்டும் என்ற நப்பாசையால் தொடர்ந்து சிறுபான்மை சமுதாயமான வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தை தொடர்ந்து வஞ்சனை செய்வது நல்லது அல்ல... சிறு சிறு குருநிலங்கலாக சிதறி கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து அதை இந்தியாவாக உருவாக்கி அதை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே முஸ்லிம் சமுதாயமாகும். அதை பற்றி படம் எடுக்க ஆண்மை உள்ள வீரமகன் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை. ஆங்கிலேயன் நாட்டை கைப்பற்றிய பிறகு நாட்டு விடுதலைக்காக சொத்தை இழந்து, சுகத்தை இழந்து தமது சதவீதத்துக்கும் அதிகமாக உயிர் தியாகம் செய்து இந்தியாவை ஆங்கேலயனிடமிருந்து மீட்டெடுத்த முஸ்லிம் சமுதாயத்தை பற்றி சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பதை விளக்கம் வகையில் படம் எடுக்க ஆண்மை உள்ள வீரமகன் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை. சுதந்திர போராட்ட பிரச்சாரம் பற்றி இந்து கோவிலிலோ, கிறித்தவ ஆலயத்திலோ எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தாத போது முஸ்லிம்கள் பள்ளிவாசலை சுதந்திர போராட்ட களமாக அமைத்தார்கள் என்பதையெல்லாம் படமாக எடுக்க துப்பில்லாமல் குறைந்த பட்ச நன்றி விசுவாசம் கூட இல்லாத மக்களை பார்த்து வருகிறோம். முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால் சுதந்திர போராட்டம் பற்றி முஸ்லிம்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் படம் எடுங்கள். அதைவிட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரல் வலை மீண்டும் மீண்டும் நசுக்கப்பட்டால் அதன் எதிர்விளைவுகள் வேறு மாதிரி அமைந்து விடும். திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் டைட்டிலில் இரண்டு பக்கமும் அரபு வாசகங்கள் அடங்கிய ஆணும் பெண்ணும் இருப்பதை பாருங்கள். இந்த படத்தை பற்றிய நிலவரங்களை முஸ்லிம் அமைப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home