3 January 2014

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் ...



புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :

சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.

உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்’.

மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:

"இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."

ஒரு கம்யூனிஸ்ட் தொழிலளியின் கல்லறை வாசகம்

"இங்கும் புதை குழியில் கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகின்றான்."

அரசியல்வாதியின் கல்லறை மீது எழுதப்பட்ட வாசகம்

"தயவு செய்து இங்கே
கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்துவிடப்போகிறான்."

அன்புடன்...

-ராஜா-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home