20 January 2014

கேள்வி: உலகில் அதிக உயிர்கள் இஸ்லாமியர்களால் தான் கொள்ளபடுகிறது ஆகவே இஸ்லாம் எப்படி அமைதியான மார்க்கம் ஆகும் ??

கேள்வி: உலகில் அதிக உயிர்கள் இஸ்லாமியர்களால் தான் கொள்ளபடுகிறது ஆகவே இஸ்லாம் எப்படி அமைதியான மார்க்கம் ஆகும் ??
(ஃபாசிச எதிர்ப்பாளன் அய்னுல்)
பதில்: 
எதையுமே ஒரு எடுத்துக்காட்டோடு சொன்னா தான் புரியும். இல்லையா?
எ. கா: இந்தியா என்ற ஒரு நாடு நல்ல கனிம வளம் கொண்ட படை பலம் அவ்வளவாக இல்லாத நாடு. சீனா என்ற படை பலம் மிக்க அரக்க குணம் கொண்ட நாடு இந்தியாவை அக்கிரமிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்துகின்றனர். இந்தியர்கள் என்றால் 75% இந்துக்களும் 25% சிறுபான்மையினரும் தான். ஆனால் அவர்களைப் பார்த்து தீவிரவாதிகள் என்று சீனா கூறுகிறது. இந்தியப் போராளிகள் இந்தியாவில் இருந்து கொண்டு சீனாகாரனுக்கு வேலை பார்க்கும் சிலரை களை எடுக்கின்றனர் நமது போராளிகள். ஆனால் சீனாக்காரன் என்ன சொல்கிறான் இந்திய போராளிகள் கொலை காரர்கள், மோசமானவர்கள் என்று. உலக ஊடகங்களும் அவனிடம் தான் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், பர்மா, மியான்மர் போன்ற கைக்கூலிகளை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த உலகத்தையும் நம் மீது கேட்ட அபிப்பிராயம் ஏற்படும் படி செய்துவிட்டான். கமல்ஹாஸன் போன்ற நடிகர்களை வைத்து நம்மை மோசமானவர்களாக சிதரிததும், தின மலர் போன்ற பத்திரிகைகளின் வாயிலாவும் விஷக்கருத்துக்களை பரப்பியும் உலகத்தையே நம்ப வைத்துவிட்டான்.
எங்கெல்லாம் இந்துக்கள் சிறுபான்மையிஞராக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியுடன் அவர்களை எப்படி அடக்குவது, ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து, பாசிஸ்ட்களின் துணையுடன் வெற்றி பெறுகிறான். இப்போது இந்துக்கலுக்கு நாட்டை மீட்பது மட்டும் அல்ல, அவர்களின் மீது உள்ள அந்த அவப்பெயரை துடைத்திட கடுமையாகப் போராடுகின்றனர். ஆனால் சீனாக்காரணோ அவர்கள் மீது பொடா போன்ற சட்டங்களை திணிக்கிறான். போலி எங்கவுண்டரில் பல பேரை கொள்கிறான். கோயில்களை இடிக்கிறான். ஆனால் நீதி மன்றம் கை கட்டி நிற்கிறது. கொலைக்குற்றவாளி பிரதமர் வேட்பாளர் ஆகிறான். சீனாக்காரனே குண்டு வைத்து விட்டு அப்பாவி ஹிந்துக்களின் மீது பழி போடுகிறான். சீன ராணுவமே பாசிஸ்ட்களிடம் வெடி குண்டைக் கொடுத்து கோயிலில் வைக்க சொல்லி விட்டு பிறகு ராணுவத்தில் ஒருவர் வெடிகுண்டை திருடிவிட்டார் என்று கூறுகிறது. நமது சுதந்திரப் போராளிகளின் தலைவரை ஒரு சீனாக்காரன் கையில் ஒரு இந்துவின் பெயரை பச்சை குத்திக் கொண்டு சுட்டுக் கொன்று விடுகிறான்.
இப்படித்தான் இந்து மதம் ஒரு தீவிரவாத மதமாக சித்தரிக்கப்பட்டு உங்களைப் போன்ற ஒருவர் கேட்கிறார், உலகில் அதிக உயிர்கள் இந்துக்களால் தான் கொள்ளபடுகிறது ஆகவே இந்து மதம் எப்படி அமைதியான மதம் ஆகும் ??
‪#Meeran Mohaideen
 -அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home