8 January 2014

நாட்டு மக்களுக்கு நல்ல வேட்பாளர் தேவை: ஆம் ஆத்மி



மக்களவைப் பொதுத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. வேட்பாளர்கள் பட்டியலை பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடுவது என கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் சனிக்கிழமை முடிவு எடுக்கப்பட்டது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தி ருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய செயற்குழு டெல்லியில் கூடியது. முதல்வரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலும் அமைச்சரவை மூத்த உறுப்பினர் மணிஷ் சிசோதியாவும் கூட்டத்திலிருந்து சிறிது நேரத்தில் புறப்பட்டனர்.

கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரசாந்த் பூஷண், சஞ்சய்சிங், யோகேந்தர் யாதவ் மற்றும் கோபால் ராய் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடந்தது. பெரும் பாலான மாநிலங்களின் கட்சி அமைப்பாளர்கள், செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் தொடர உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செய்தியாளர் கூட்டத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சஞ்சய் சிங் ஆகியோர் அறி வித்தனர்.

பூஷண் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி, சில மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடுவது என சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கட்சியின் உயர் தலைவர் கேஜ்ரிவால்தான். பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்றார் பூஷண்.

சஞ்சய்சிங் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி சார்பில் போடியிட விருப்பம் தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து மனுக்கள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து இறுதி பட்டியல் அறிவிக்கப்படும். யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு நகரங் களில்தான் ஆதரவு உள்ளது. கிராமங்களில் இல்லை என கூறப்படுவதை மறுத்த சஞ்சய்சிங், ‘கட்சியின் மாநில பிரதிநிதிகளை சந்தித்த பின், எங்களுக்கு அனைத்து இடங்களிலும் பேராதரவு இருப்பது தெரியவருகிறது. நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவோம். ஊழல், கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு டிக்கெட் தரமாட்டோம்என்றார்.
(நன்றி- தி இந்து)
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home