மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக
தப்" என்னும் கொட்டின் முழக்கம் காற்றில் மிதந்தது! ஈச்ச மர ஓலைகள் தெருவெங்கும் தோரணமாகி வரவேற்பு வளைவுகளை அமைத்துக் கொண்டிருந்தன! வண்ண வண்ண ஆடைகளணிந்த மக்கள் கூட்டம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீராட.... கோடையை மறந்த குளிர்காற்று குதூகலமாய் கதவைத் திறந்து வந்தது!
**அண்ணலின் பாதம் தொட்ட
அந்த நாள்
யத்ரிபின் வசந்தத் திருநாள்!
**பிறந்து வந்தத் தேன் பூக்கள்
புதிது புதிதாய்
வாசனையைத் தடவிக் கொண்டன!
**தென்றல்
அண்ணல் வரும்
திசை நோக்கித்
தலை சீவிக் கொண்டது!
**யத்ரிப் வீதிகள்
குட்டிக் குழந்தைகளின்
மொட்டுப் பாட்டுகளால்
குதூகலப்பட்டது!
**சாலையின் இரு புறங்களும்
மக்கள்
பூக்களாய் நின்றார்கள்!
**மனித மனங்கள்
இறக்கைக் கட்டிக் கொண்டு
அண்ணலைப் பார்க்க
ஆவலாய்ப் பறந்தன!
**வசந்தம்
யத்ரிபுக்கு முகவரியை மாற்றிக் கொள்ள
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது!
**மரங்கள்
தங்கள் கனிக் குழந்தைகளுக்கு
அதிகமான இனிப்பை
ஊட்டிக் கொண்டிருந்தன!
**சொர்க்கத்தின் காற்று
யத்ரிப் வீதிகளில்
கைவீசி நடை போட்டது!
**ஈச்ச மரங்களின் உச்சிகளிலெல்லாம்
மனிதத் தலைகள்
காய்த்துக் கிடந்தன
அண்ணலைக் காண!
**யூதர் ஒருவர்
உடைந்த சுவரின் உயரத்தில்
ஒற்றைக்கால் கொக்கைப்போல்
தொங்கிக்கொண்டு
காத்திருந்தார்!
**காத்திருந்த கண்களுக்கு
விமோசனம் கிடைத்தது!
அண்ணலைக் காணும்
முதல் தரிசனம்
அவருக்கேக் கிடைத்தது!
** " அதோ! அதோ ....
நபிகள் வந்து விட்டார்கள்!"
" அல்லாஹு அக்பர் "
"அல்லாஹு அக்பர்"
முழக்கம் வானைப் பிளந்தது!
அமரர்களும் எட்டிப் பார்த்தார்கள்!
" கஸ்வா" மேல் அமர்ந்து
வள்ளல் நபி
வாசனையாய்
வந்து கொண்டிருந்தார்கள் !
**இதயங்கள் இடம் மாறி
இதழ்களுக்கு வந்தன!
வார்த்தைகளால் வள்ளலுக்கு
வாழ்த்துக்கள் கூறின!
**இனிப்பைச் சூழ வரும்
எறும்புகள் போல்
மானிடர் கண்கள் எல்லாம்
மக்க நபி பேரெழிலை
மொய்த்து நின்றன!
**பாச வாசனை பூசிக் கொண்ட
மனங்கள்
நேச நபியின் முகம் பார்த்து
மலர்ந்தன!
**மாநபிகள் பாதம் பதிவதற்கு
மனமுள்ள மனிதர் இல்லங்கள்
மழைமேகம் போல் பந்தலிட்டன!
**இல்லங்கள் எல்லாம்
கதவுகளை
கழற்றி வைத்து விட்டு
இனியவரின் வருகைக்கு
வாசலாகி நின்றன!
**தன்னை மனம் கொண்டோர்
இதயப் பூக்கள்
வாடிப்போக விரும்பாத
பெருமானார்
ஒட்டகத்தை நடக்க விட்டார்!
அது ஒதுங்குமிடமே
தாம் தங்குமிடம் என அறிவித்தார்!
**கஸ்வா ...
கம்பீரமாய் நடந்தது!
மக்கள் தொடர்ந்தார்கள்!
**அபூ ஐய்யூப் அன்சாரி
புண்ணியம் பெற்றார்!
ஒட்டகம்
அவர் வீட்டின் முன்னே
வட்டம் அடித்துப்
படுத்துக் கொண்டது!
மக்கள் ஆனந்தத்தின்
ஆரவாரத்தில் மிதந்தார்கள்!
**மாநபிகள் பாதம் பட்ட
யத்ரிப்
புண்ணியம் பெற்றது!
தனது புராதனப் பெயரை
அண்ணலுக்கு
அர்ப்பணம் செய்து
"மதீனா"வாய் ஆனது!
**மதீனா -
நகரங்களின் சிகரம்!
இதன் பெயரைச்
சொல்லச் சொல்ல நாவில்
சுரந்து வரும் அமுதம்!
அன்பும் அறமும்
அடைக்கலம் கொண்ட
நந்தவனம்
பாலைவனப் பூங்காவனம்!
நபிகளின் தாயார்
ஆமினா அம்மையார்
பிறந்த மண்ணும்
தந்தையார் அப்துல்லா
மறைந்த மண்ணும்
மதீனாதான்!
**மண்ணுக்கும் விண்ணுக்கும்
வாழ்வாய் வந்துதித்த
வான் சொர்க்கம் உறையுமிடம்!
அண்ணலை ..
அடிமையை ..
ஹபீபாய்
உவந்து கொண்ட
அல்லாஹ்வின்
அருள் சுரக்கும்
மண்ணகத்தின் சுவனம்!
நபிகள் தங்குவதற்கு அவசர அவசரமாய் ஒரு இல்லம் மண்ணாலும் ஈச்ச ஓலைகளாலும் எழுப்பப் பட்டது! அதுவே அல்லாஹ்வை வணங்கும் பள்ளி வாயிலாகவும் ஆனது! நபிகளுக்கு முன்னாலும் பின்னாலும் மதீனாவுக்கு வந்த மக்கத்து முஸ்லிம்கள் அகதிகளாக நின்றார்கள். அவர்களின் சோகத்தைத் துடைக்க அண்ணல் முடிவெடுத்தார். அதனால்...
மதினா நகரத்து அன்சாரிகளை எல்லாம் அண்ணல் அன்போடு அழைத்தார்!
மக்கத்து அகதிகள் உங்கள் உடன் பிறப்பென்றார்!
அவ்வளவுதான்....
அன்சாரிகள் ஓடி வந்து மக்கத்து முஸ்லிம்களை வாரி அணைத்தார்கள்! சொல்லால் மட்டுமல்ல செயலாலும் அவர்களை தங்கள் உடன் பிறப்பாய் ஏற்றுக் கொண்டார்கள்! சொத்தில் ..சுகத்தில்...தோட்டம் துறவுகளில் சரி பாதியை தங்களுக்கு சொந்தமில்லாத சொந்தங்களுக்கு சொந்தமாக்கி சொந்தம் கொண்டாடி மகிழ்ந்தார்கள்! அது மட்டுமா?
இரு விழி பெற்றவர்
ஒரு விழி தந்தனர்!
மருள் விழி மங்கையை
மனமுவந்தளித்தனர்!
அன்சாரித் தோழர் ஒருவர் தன் இரு மனைவியரில் அழகான ஒருவரை மணவிலக்குச் செய்து அவளை தனது மக்கத்து உடன் பிறப்புக்கு மனம் செய்தது கொடுத்து மகிழ்ந்தார்!
மாசில்லாத மக்களின் மாண்பான செயல்களை நபிகள் ஈரவிழிகளால் நன்றியுடன் நினைந்தார்! கொலை வாட்கள் துரத்தி வரும் வேளையில் பூச்சரங்களால் வரவேற்ற மதீனா மக்களின் அன்பை எண்ணி எண்ணி பெருமானார் மகிழ்ந்தார்!
*******************************************************
**** மறுவிலாதெழுந்த முழுமதி முஹம்மது ரஸூலுல்லாஹ் ...(நபிகளாரின் வாழ்க்கைத் தொடர்...சுருக்கமாக ) ****
***** பத்தாம் பிறை ***** போரிட்டார் *****
*** மக்கத்து நபியின் சொர்க்கத்து வாசனையைத் தொட்டு சுகந்தமாய் வீசிக் கொண்டிருந்தது மதீனத்துத் தென்றல்! அண்ணலின் ஆன்மீக வெளிச்சத்தில் மக்கள் ஆனந்த நீராடிக் கொண்டிருந்தனர்!
தென்றல் ஒன்று புயலாய் மாறி புழுதியைக் கிளப்பிக் கொண்டு புரவியில் வந்தது! மக்கத்து குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்து வரும் பயங்கரத்தைச் சொன்னது!
மகிழ்ந்து நின்ற மக்கள் மிரண்டுபோய் மன்னர் முஹம்மது முகத்தைப் பார்த்தார்கள்!
" மதீனா...அமைதிப் பூங்கா! எதிரிகளை அவர்களின் இடத்திலேயே சென்று சந்திப்போம்... புறப்படுங்கள்!" எனப் போர் முழக்கமிட்டார் பெருமானார்!
ஆர்த்தெழுந்த 313 நபித் தோழர்கள் நபிகளின் பின்னே அணிவகுத்து " பத்ர் " என்னும் இடத்தை அடைந்தனர்.
எழுநூறு ஒட்டகங்கள், நூறு போர்ப் புரவிகள், கவசங்கள் அறுநூறு, மின்னும் வாட்கள் பலநூறோடு குறைஷியர் ஆயிரம்பேர் அங்கே திரண்டு நின்றனர்!
ஐந்து குதிரைகள், எழுபது ஒட்டகங்கள், ஆறு கவசங்கள், உடைந்து போன எட்டு வாட்களோடு முஸ்லிம் படை பரிதாபமாக நின்றது!
எதிரிகளின் பெரும் படையைக் கண்ட பெருமானார் இதயம் அதிர்வுக்கு ஆளானது! தங்கள் குடிலுக்குள் நுழைந்த அண்ணல் ... இறைவன் சன்னிதியில் நெற்றி நிலம் பதித்து நிலவரம் சொன்னார்கள்! சிரம் பணிந்து கிடந்த பெருமானாரை சிறு தூக்கம் ஒன்று ஆட்கொண்டது! அந்தத் தூக்கத்தில் இறைவன் தன் தூதருக்கு வெற்றி வரும் செய்தியை அறிவித்தான்! போர்க்களம் சந்திக்க இருக்கின்ற விந்தைமிகு காட்சிகளை விவரித்தான்!
இணையற்ற அல்லாஹ்வைப் புகழ்ந்து எழுந்து வந்த அண்ணல் தோழர்களிடம் உரையாற்றினார்!
தீட்டப்படுகின்ற வாட்கள்
சிதற விடுகின்ற
தீச்சுடராய்
வார்த்தைகள்
தெறித்து விழுந்தன!
" விரைவில் இவர்களின் கூட்டம் சிதறடிக்கப்படும்" இறைவன் அறிவித்த வேத வரிகளை நபிகள் வீரியத்தோடு வெளியிட்டார்!
" மண்ணில் சாவோம்...
சொர்க்கத்தில் எழுவோம்!
அதற்கும் முன்னால்
ஆயிரம் போரையும்
அடியோடு சாய்ப்போம்!"
உடைந்த வாளோடும்
உறுதி குலையாத
வீரத்தோடும்
சிலிர்த்தெழுந்தது
சிறுத்தையர் கூட்டம்!
குறைஷிகள் ... உத்பா என்பவர் தலைமையில் வீரத்தோடு களத்தில் குதித்தார்கள்!
உபைதா, ஹம்சா, அலீ என்ற மூன்று புலிகளை நபிகள் இறக்கி விட்டார்!
உத்பாவின் பிள்ளைகள் ஹைபாவும் வலீதும் சாவூருக்கு போய் சேர்ந்தார்கள்! உத்பா ஆவேசத்தோடு வீசிய வாள்வீச்சில் நபித் தோழர் உபைதா சொர்க்கத்தை பெற்றுக் கொண்டார்!
ஹம்சாவும் அலீயும் விளையாடிய வீர விளையாட்டில் வேங்கை வாய்ப்பட்ட வெள்ளாடுகளாய் குறைஷிகள் செத்து விழுந்தார்கள்!
குறைஷிகளின் கோபக்காரத் தலைவன் அபுஜஹலை முஅவ்விது, முஆது என்ற அன்சாரி இளைஞர்கள் தேடித் பிடித்துக் கொன்றார்கள்!
குறைஷிகள் ... தாங்கள் கனவிலும் காணாத தோல்வியால் துவண்டார்கள்! தங்கள் மரியாதைக்குரியத் தலைவர்கள் தலையிழந்து தரையில் கிடப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தார்கள்!
மாலைக்குள் போர் முடிவுக்கு வந்தது! குறைஷிகள் எழுபதுபேர் சுவாசத்தைத் துறந்தார்கள்! மற்றொரு எழுபது பேர் சுதந்திரத்தை இழந்து முஸ்லிம்களிடம் கைதிகளாகி மதீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்! முஸ்லிம்கள் பதினாறு பேர் மரணத்தை மஹராகக் கொடுத்து சொர்க்கத்தைத் தொட்டார்கள்!
அல்லாஹ் ..தான் வாக்களித்த வெற்றியை தன் திருத்தூதருக்கு வழங்கி விட்டான்!
பத்ருப் போரைத் தொடர்ந்து வந்த உஹதுப்போர், முஸ்தலிக் போர், அகழ்போர் உட்பட அனைத்துப் போர்களிலும் இறையருளால் நபிகளே வென்றார்!
திசைகளெல்லாம் இஸ்லாத்தின் வரவுக்கு வாசலைத் திறந்தன! அரபு நாடு அண்ணலின் ஆளுகைக்குள் அங்கம் அங்கமாய் சேர்ந்தது! ஓரிறைக் கொள்கையில் தங்கமாய் ஜொலித்தது! இஸ்லாம்... எல்லைகளைக் கடந்தும் எட்டிப் பார்த்தது! தூய்மையான அதன் வாசத்தில் மக்களின் சுவாசமெல்லாம் சுகப்பட்டது!
முஸ்லிம்களை எதிர்க்கத் துணிவில்லாத குறைஷிகள் நபிகளோடு ஒரு ஒப்பந்தம் கண்டார்கள்! " மகத்தான வெற்றி" என இறைவனே அறிவித்த,
" ஹுதைபிய்யா உடன்படிக்கை" நபிகளார் மக்கா சென்று இறை இல்லம் காபாவை தரிசிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது!
குறைஷிகளின் முட்டாள்தனத்தால் ஹுதைபிய்யா உடன்படிக்கை அற்ப ஆண்டுகளில் ஆயுளை விட்டது! அது... மாபெரும் வெற்றியை நோக்கி
மாநபியை அழைத்துச் சென்றது!
***** பதினொன்றாம் பிறை ... இன்ஷா அல்லாஹ் ... நாளை வரும் ***** அபு ஹாஷிமா**அண்ணலின் பாதம் தொட்ட

-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home