1 February 2014

இமெயில்

நமக்கென்று ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்து அதனை மட்டும் பயன்படுத்தக் கூடாது. நம்முடைய மூதாதையர் வீட்டு முகவரியினை நிரந்தர முகவரியாகக் கொள்வது போல இமெயில் முகவரியினையும் எண்ணக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண் டும். குறைந்த பட்சம் மூன்று இமெயில் அக்கவுண்ட்களையாவது ஒருவர் கொண் டிருக்க வேண்டும். இவற்றில் ஒன்றை வீட்டு பணிகளுக்கும் உறவினர்களுக் கும் வைத்துக் கொள்ளலாம். இன் னொன்றை உங்கள் அலுவலகப் பணிகளுக்கும் மற்றொன்றை உங்களின் இன்டர்நெட் சார்ந்த செயல்பாடுகளுக்குமாக வைத்துக் கொள்ளலாம். இமெயில் அக்கவுண்ட்கள் இலவசமாகக் கிடைத் தாலும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை கட்டணம் செலுத்திப் பெறும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு இமெயில் அக்கவுண்ட்டை வெகு நாட் களாக வைத்திருப்பீர்கள். அதன் மூலம் பல வழிகளில் தொடர்பினை ஏற்படுத் திக் கொண்டு இருந்தால் உங்களுடைய இமெயில் பல ஸ்பாம் மெயில் அனுப்புபவர்களிடம் சென்றிருக்கும். அதனால் தொடர்ந்து அந்த அக்கவுண்ட்டிற்கு மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் என்னும் குப்பை மெயில்களும் உங்களை கண்ணி வைத்துப் பிடிக் கும் மெயில்களும் வந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அக்கவுண்ட்டையே மூடிவிட்டு வேறு பெயரில் புதிய அக்கவுண்ட்டை ஏற்படுத்துங்கள். உங்களிடம் உள்ள மற்ற இமெயில் அக்கவுண்ட் மூலம் உற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு மட் டும் இந்த மாற்றத்தை தெரிவியுங்கள்.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home