பூட்டிய காரை திறந்தவுடனே ஏசியை போடாதீங்க! - ஏன் தெரியுமா?
வெளியில் காயும் வெயிலின்
தகிப்பை தணித்துக் கொள்ள காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை ஓட விட்டு
ஆசுவாசப்படுத்திக் கொள்வது பலருக்கு வழக்கம்.
ஆனால், காரை
திறந்தவுடன் ஏசியை போடுவது உடல் ரீதியான பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என சமீபத்திய
ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வருமளவுக்கு பிரச்னை இருப்பதாக ஆய்வுகள்
எச்சரிக்கின்றன.
அஷ்ரப்
நச்சுப் பொருள்
**********************
பூட்டிய
கார் வெயிலில் நிறுத்தியிருக்கும்போது டேஷ்போர்டு, ஏர்
ஃப்ரெஷ்னர் மற்றும் இருக்கைகளின் பாகங்களிலிருந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
பென்ஸின் வேதிப்பொருள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில், அடங்கியிருக்கும்
கார்சினோஜன் என்ற நச்சுப்பொருள் புற்றுநோயை உண்டு பண்ணும் தன்மை கொண்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் வாடை
***********************
பூட்டிய
காரை திறந்தவுடன் வரும் பிளாஸ்டிக் வாடையை வைத்து பென்ஸின் அதிக அளவில் இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம். மேலும், இந்த பென்ஸினில் புற்றுநோய்
காரணி மட்டுமில்லாமல், ரத்த சோகை, ரத்த
அணுக்களை குறைக்கும் காரணிகளையும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பென்ஸின் அளவு
***********************
பொதுவாக
மூடப்பட்ட இடங்களில் ஒரு சதுர அடியில் 50 மில்லி கிராம்
பென்ஸின் இருக்கலாம். மூடப்பட்டு நிறுத்தியிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400
முதல் 800 மில்லி கிராம் பென்ஸின் இருக்கலாம்.
ஆனால்...
ஆபத்து
*********************
சில சமயம்
60 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருக்கும்போது
நிறுத்தியிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 2000 முதல் 4000
மில்லி கிராம் அளவு பென்ஸின் வெளியேற்றப்படும். சாதாரண அளவை விட 40
மடங்கு கூடுதல் பென்ஸினை பயணிகள் சுவாசத்தில் உள்ளிழுக்கும் ஆபத்து
ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ஸ்
********************
கிட்னி, கல்லீரல் போன்றவையும் பென்ஸினில் இருக்கும் கார்சினோஜன் நச்சுப் பொருளால்
பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதாம். எனவே, காரை
திறந்தவுடன் கண்ணாடிகளை இறக்கிவிட்டு உள்ளே ஒரு சில நிமிடங்கள் வெளிக் காற்று
உள்ளே செல்லும் வரை காத்திருக்கவும். பின்னர், ஏசியை ஆன்
செய்வது நலம். இல்லையென்றால், பென்ஸின் வெளியேறாமல்
உடலுக்குள் அதிக அளவில் சுவாசம் வழியாக உள் இழுக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
-அஷ்ரப்
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home