அடிக்கடி டயர் பஞ்சராவதற்கான காரணங்களும், தவிர்க்கும் முறைகளும்...!!
பஞ்சர்... இந்த
வார்த்தையை கேட்டாலே பலருக்கு எரிச்சல் வரும். நடு வழியில் தவிக்கவிடும் இந்த டயர்
பஞ்சர் பிரச்னைக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், சில வாகனங்களில் அடிக்கடி
டயர் பஞ்சராகும் பிரச்னை இருப்பதுண்டு. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முதலில் ட்யூப் கொண்ட
டயர்கள், அடுத்ததாக ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சர் ஏற்படுவதற்கான காரணங்களையும்,
அதன் தொடர்ச்சியாக பஞ்சர் பிரச்னையை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும்
காணலாம்.
ட்யூப் டயர்
******************
ட்யூப்லெஸ்
டயர்களைவிட ட்யூப் டயர்களில்தான் பஞ்சர் பிரச்னை அதிகம் ஏற்படுகின்றது. இதற்கு பல
காரணங்கள் இருந்தாலும், ட்யூப்லெஸ் டயர்களைவிட ட்யூப் கொண்ட டயர்கள் தடிமன்
குறைவாக கட்டமைப்பை கொண்டிருப்பது முக்கிய காரணமாக கூறலாம்
துரும்புதான் பிரச்னை
************************
அடிப்படையில்
முள், ஆணி, இரும்பு துகள்கள்
உள்ளிட்டவற்றால் ட்யூப் டயர்கள் எளிதில் பஞ்சராகின்றன. டயூப்லெஸ் டயர்களைவிட
ட்யூப் டயர்களில் காற்று வேகமாக வெளியேறுவதே பிரச்னைக்கு காரணமாக இருக்கிறது.
மேலும், ஸ்டீல் ரிம் பொருத்தப்பட்ட கார்களில் ரிம்
துருப்பிடித்து டயரில் பாதிப்பை ஏற்படுத்தி பஞ்சர் ஏற்படுவதும் உண்டு
காற்றழுத்த பராமரிப்பு
**************************
டயரில்
காற்றின் அழுத்தத்தை சரியாக பராமரிப்பதும் அவசியம். காற்றழுத்தும் கூடுதலாக
இருக்கும் டயர்களில் சிறு துரும்புகள் எளிதாக பஞ்சர் ஆக்குவதற்கு வாய்ப்பு அதிகம்.
இதேபோன்று, காற்று அழுத்தம் குறைவான டயர்களின் உள்புறத்தில்
அதிக சூடாகி டயர் மென்மையாகி, முந்தைய ஸ்லைடரில் சொன்ன
பொருட்களால் டயர் எளிதாக சேதமடைந்து பஞ்சர் ஏற்படுகிறது
ட்யூப் பிரச்னை
**************************
சில புதிய
ட்யூப்களிலேயே மவுத் நட் சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்காது. இதனால், மவுத் நட் பகுதியிலிருந்து காற்று வெளியேறும். மேலும், ட்யூபை மாற்றும்போது மவுத்நட்டை கவனமாக ரிம்மில் சரியான அளவில் பொருத்த
வேண்டும். தவிர, அதிக பஞ்சர் ஒட்டப்பட்ட டயூப்களை தொடர்ந்து
பயன்படுத்துவதால், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில்
அழுத்தம் தாங்காமல் மீண்டும் பஞ்சராவதற்கு அதிக வாய்ப்புள்ளது
தடிமனான கட்டமைப்பு
*****************************
ட்யூப்
டயர்களைவிட ட்யூப்லெஸ் டயர்கள் சற்று பிரச்னை குறைவானது. ஆனாலும், முள், ஆணி, கம்பி போன்றவற்றால்
பஞ்சராவதற்கு வாய்ப்பு அதிகம். ட்யூப்லெஸ் டயர்கள் பஞ்சரானால் கூட காற்றழுத்தம்
உடனடியாக குறையாமல் அதன் சுவர்கள் தடிமனான கட்டமைப்பு கொண்டது. காற்று மெல்ல
குறையும். அதற்குள் அருகிலுள்ள பஞ்சர் கடைக்கு சென்று பஞ்சர் ஒட்டிவிடுவது நல்லது
ரிம்மில் நெளிவுகள்
******************************
ஸ்டீல்
வீல்களுக்கும், ட்யூப்லெஸ் டயர்களுக்கும் ஏழாம் பொருத்தம்
ஏற்படுவது இயற்கை. எனவே, ஸ்டீல் வீல்களில் டயர்கள் சரியாக
பொருத்தப்படுவதும், காற்றின் அளவு சரியாக
பராமரிக்கப்படுவதும் அவசியம்
பலகீனம்
***************************
டயர்களின்
உழைப்புக்கு தகுந்தவாறு அதன் தடிமனான சுவர்கள் மெல்ல உறுதித்தன்மையை இழக்க
ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் டயரின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே உப்பல்கள்
தெரிய ஆரம்பிக்கும். இதுபோன்ற டயர்கள் வெப்பத்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
என்பதால், உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.
ஸ்டீல் இழைகள்
*****************************
சில சமயம்
மோசமான சாலைகளில் செல்லும்போது டயர்களில் பொருத்தப்பட்டிருக்கும் மெல்லிய ஸ்டீல்
இழைகள் கூட டயர்களில் குத்தி பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, மோசமான சாலைகளில் செல்லும்போது காற்று குறைவாக இருந்தால் நிச்சயம் டயரில்
பாதிப்பு ஏற்படும்.
தவிர்த்தல் – காற்றழுத்தம்
*********************************
டயர்களில்
சரியான காற்றழுத்தத்தை பராமரித்தல் அவசியம். வாரம் ஒருமுறையாவது டயரில்
காற்றழுத்தத்தை சோதிப்பது அவசியம். குறிப்பாக, டயர்
குளிர்ச்சியாக இருக்கும் சமயத்தில் சோதித்தால் சரியான அளவை தெரிந்து கொள்ள
முடியும்.
ஸ்டீல் ரிம்
************************************
சக்கரங்கள்
ஸ்டீல் ரிம் கொண்டதாக இருந்தால், துரு பிடித்துள்ளதா அல்லது
வளைவு நெளிவுகள் இருக்கிறதா என்று சோதித்து சரி செய்து விடுங்கள்.
பஞ்சர் கிட்
**********************
நெடுந்தூர
பயணங்கள் செல்லும்போது ட்யூப்லெஸ் டயர் பஞ்சர் கிட் ஒன்றையும், மினி ஏர் கம்ப்ரஷர் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். ஆனால்,
இது ட்யூப் டயர்களுக்கு ஒத்துவராது. எனவே, ஸ்பேர்
டயர் அவசியம்.
சீலண்ட்
*********************
டயர்களுக்குள்
சீலண்ட் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் சிறிய பஞ்சர் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
ஸ்பேர் டயர்
************************
எப்போதும்
ஸ்பேர் டயர் ஒன்றை கையில் வைத்திருப்பது நலம். மேலும், அதற்கான ஜாக்கி இருப்பதுடன், அது சரியாக இயங்குகிறதா
என்பதையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
-அஷ்ரப்
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home