8 March 2014

கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க?



கைகால் மூட்டுகளில் கருப்பாக இருக்கிறது. நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் விஜயலட்சுமி ராஜன்...

ஒரு மீடியம் சைஸ் கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஸ்க்ரப்போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை  எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து கழுவவும். பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இப்படிச் செய்தால்  நல்ல பலன் கிடைக்கும்.

பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.  இதுவும் நல்ல ரிசல்ட் தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து  ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி பத்து நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் சீக்கிரமே கருப்பு நிறம் மாறும்.
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home