மணிக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்!
பெய்ஜிங்: மணிக்கு 3000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரெயிலில் பயணம் செய்தால் எப்படி இருக்கும்? என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டெங் ஜிகாங், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு ரெயிலை இயக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்காக அவர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாக்லேவ் ரெயில் வளைவை (லூப்) அறிமுகம் செய்துள்ளார். மணிக்கு நூற்றுக்கணக்கான கி.மீ. வேகத்தில் செல்லும் மாக்லேவ் ரெயில் ஆசியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, காற்றழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த ரெயில்கள், மணிக்கு 400 கி.மீ. வேகம் வரை செல்கின்றன. ஆனால், ஜிகாங் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் எதிர்காலத்தில் அதிவேகமான ரெயில்களை இயக்கும் நடவடிக்கையின் ஆரம்பமாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக ஜிகாங் கூறுகையில், “ரெயிலின் வேகத்தை 400 கிலோ மீட்டருக்கும் மேல் அதிகரித்தால், காற்று எதிர்ப்பு காரணமாக 83 சதவீதத்திற்கும் அதிகமான இழுவை ஆற்றல் விரயம் ஆகும். ரெயில் பாதையில் உள்ள வெற்றிடக் குழாயில் (வேக்கம் டியூப்) கடல் மட்டத்தில் உள்ள சாதாரண வளிமண்டல காற்றழுத்தத்தைவிட 10 மடங்கு குறைவான காற்றழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஷாங்காய் மாக்லேவ் ரெயில்தான் உலகின் அதிவேக ரெயில் என கருதப்படுகிறது. இது மணிக்கு 431 கி.மீ. வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home