24 May 2014

எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்... டயாலிசிஸ்... வெறும் 600 ரூபாயில் கம்மி ரேட்டில் காஸ்ட்லி செக் அப்

தலைவலி காய்ச்சல் என்றாலே அனைத்து டெஸ்டையும் எடுக்கச்சொல்லி பர்சை பதம்பாக்கும் மருத்துவ உலகிற்கு மத்தியில் டயாலிசிஸ்க்கு வெறும் ரூ 600 வாங்கும் மருத்துவமனை சென்னை மாநகரின் மத்தியில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். சேவை மனப்பான்மையுடன் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து செயல்படுகிறது ஒரு மருத்துவமனை.

லயன்ஸ் ஓம் பரிசோதனை மைய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

பன்னாட்டு அரிமா சங்கம் மாவட்டம் 324 ஏ,5, என்ற அமைப்பின் மூலம் கண் சிகிச்சை, ரத்ததான முகாம் உள்பட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தியுள்ளோம். ரத்த வங்கியும் வைத்துள்ளோம். தற்போது புதிதாக அரிமா சங்கத்தில் டயாலிசிஸிஸ் சிகிச்சை நடத்திவருகிறோம். மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவத்துறையில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக அரசு பொதுமருத்துவமனைகளை ஆய்வு செய்தோம். பலர் சிறுநீரகப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.

இதையடுத்து டயாலிசிஸ் திட்டத்தை ஆரம்பித்தோம். 20, 25 வயதுள்ள இளைஞர்கள் கூட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வேலை நெருக்கடி, மன அழுத்தம் தரமற்ற தண்ணீர் போன்ற நம்முடைய உணவுமுறை தான் முக்கிய காரணம், சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதாக நினைத்து சத்தான உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துவிடுகின்றனர், இதற்கு‘ ‘நவீன வாழ்க்கைமுறை‘‘‘‘ என்று பெயர் வைத்துள்ளோம்.

சிறுநீரக மாற்றம் செய்யும்போது, தசை நார்கள் இணைப்பு ஒத்துப்போக வேண்டும், சிலர் இதை வியாபாரமாக்கியதால் அரசும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. மேலும் சில மருத்துவமனைகளில் எச்.ஐ.வி., ஹெபடைட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கமாட்டார்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக்கொள்கிறோம். மருந்து, மாத்திரைகளை அதன் விலைக்கே தருகிறோம்‘. அது தான் மருந்து மாத்திரை செலவு மிகவும் குறையக்காரணம் இது டயாப்பட்டீஸ், ஈ.சி.ஜி. போன்றவர்களுக்கும் பொருந்தும்.

எங்களிடம் தினமும் 20 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களிடம் இருந்து பெறப்படும் தொகையை சிகிச்சை பெற முடியாத ஏழைகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறோம். கார்ப்ரேட் நிறுவனங்கள் 2 சதவிகிதத்தை சமூக சேவைக்கு செலவிடவேண்டும் என்று சட்டம் உள்ளது. அவர்கள் எங்களுக்கு உதவினால் மேலும் எங்களின் சிகிச்சை மையங்கள் விரிவடையும். மயிலாப்பூர், திருவான்மியூர், குரோம்பேட்டை, கொளத்தூர், போன்ற பகுதிகளிலும் எங்கள் மையங்கள் செயல்படுகிறது. எங்களிடம் டயாலசிஸ் கட்டணம் ரூ.600 முழு உடல் பரிசோதனைக் கட்டணம் ரூ.599 மட்டுமே. மேலும் அல்ட்ரா ஸவுண்ட் ஸ்கேன், கலர் டாப்ளர்/ எக்கோ, ரத்த சர்க்கரைப் பரிசோதனை, தைராய்டு உள்ளிட்ட சிகிச்சைகளையும் செய்கிறோம். என்றார்.
-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home