நம்பினால் நம்புங்கள்!
* உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த நாடு சவுதி அரேபியாதான். அங்கு உலகின் 20
சதவீத (ஏறத்தாழ 26410 கோடி பேரல்) எண்ணெய் பூமிக்கு அடியில் உள்ளது.
* ஒரு கண்ணாடி பாட்டில் சிதைவதற்கு 10 லட்சம் ஆண்டுகள் கூட ஆகலாம். பாட்டில்களின் மூலமான சிலிகான் டை ஆக்சைடு மிக நிலையானது, கிரானைட் போல!
* ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 கோடி டன் கார்பன் வளிமண்டலத்தில் கலக்கிறது.
* டின் உணவு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் அதற்கான ஓபனர் கண்டுபிடிக்கப்பட்டதற்குமான கால இடைவெளி... 45 ஆண்டுகள்!
* கடலில் மின்னல் தாக்கும்போது 30 ஆயிரம் ஆம்பியர் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அருகிலுள்ள மீன் உணர்வதோ சிறு சிலிர்ப்புதான்!
* ஏ380 ஏர்பஸ் விமானத்தின் ஒரு இறக்கையின் நீளம் மட்டுமே 79.8 மீட்டர்.
* பிரபஞ்சத்தின் வடிவம் மற்றும் அது விரிவடைதல் பற்றிய ஆராய்ச்சிக்கு, இன்றும் விஞ்ஞானிகளுக்கு உதவும் முக்கியமான பொருள்... பலூன்!
* ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள் மிகமிகமிகச் சிறிய மருத்துவ ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். 60 நானோமீட்டர் அளவே கொண்ட இந்த ரோபோ, மனித உடலின் தமனிகளுக்குள் நீந்தி, பாதிப்படைந்த ரத்த நாளங்களை ரிப்பேர் செய்யும். 10 லட்சம் நானோமீட்டர் என்பதே ஒரே ஒரு மில்லிமீட்டர்!
* இதுவரை நிகழ்ந்த மாரத்தான் போட்டிகளிலேயே அதிக வேகம் 2 மணி 3 நிமிடம் 59 நொடி. இச்சாதனையை 2008 பெர்லின் மாரத்தானில் எட்டியவர் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹைய்லி ஜெபர்சேலெஸ்ஸி.
* பெட்ரோலிய பிரச்னை காரணமாக, ஃப்யூவல் செல் பேட்டரி கொண்டே எதிர்கால வாகனங்களில் பலவும் இயங்க இருக்கின்றன. அதை மலிவாகத் தயாரிப்பதற்காக விலையுயர்ந்த பிளாட்டினம் போன்ற உலோகங்களுக்கு மாற்றாக கடற்கரை மணலை பரிசோ தித்து வருகிறார்கள்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home