4 September 2014

தந்தை மார்க்கம் நோக்கி தில்ஷான்?




இஸ்லாத்தின் சில அடிப்படை விஷயங்களை
பாகிஸ்தான் வீரர் அஹமத் ஷெசாத்
எடுத்துரைத்தது விவாதமாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷானுக்கு
தில்ஷானை மதம் மாற்ற அஹமத் முயற்சி செய்தாராம்...
ஆனால் இதை ஷெசாத் மறுத்துள்ளார்.
“நான் அவரை மதம் மாற்ற முயலவில்லை.
இஸ்லாத்தின் சில அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்தேன்.
சொர்க்கம் கிடைக்க வேண்டுமானால்
இறைநெறியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் தனிப்பட்ட ரீதியில்,
நட்பு முறையில் பேசிக்கொண்டிருந்தபோது
சொன்னதுதான் அது” என்கிறார் அஹமத் ஷெசாத்.
தில்ஷானிடமிருந்து இதுபற்றி
எந்த முறையீடும் இல்லை என்பது மட்டுமல்ல,
தில்ஷானின் தந்தை முஸ்லிம்,
தாய் புத்தமதத்தைச் சேர்ந்தவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய இயற்பெயர் துவான் முஹம்மத் தில்ஷான்.
இந்தப் பெயர்தான் பிறகு திலக் ரத்ன தில்ஷான் என்றாகியது.
தில்ஷானுக்கு நேர்வழி கிடைக்க பிரார்த்திப்போம்...!
நன்றி:

-சிராஜுல்ஹஸன்


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home