4 September 2014

கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அவசியம்


தொழிற்சாலை மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். அது சாதாரண கண்ணாடியாகவோ, பவர் கண்ணாடியாகவோ இருக்கலாம். கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கென ஸ்பெஷல் டின்ட் கண்ணாடிகள் உள்ளன. தொடர்ந்து 20 நிமிடம் ஒரே இடத்தை பார்த்து கொண்டிருக்க கூடாது, 20 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களை இடம் மாற்றி 20 அடி தொலைவில் உள்ள பொருள்களை 5 நிமிடம் பார்க்க வேண்டும். நிமிடத்திற்கு 20 முறை கண்களை சிமிட்ட வேண்டும். இது கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களில் 75 சதவீதம் பேருக்கு டயாபடிக் ரெட்டினோபதி, கண்புரை மற்றும் க்ளக்கோமா எனும் கண் நோய் ஏற்படுகிறது. டயாபடிக் ரெட்டினோபதி என்பது ரெட்டினா என்கிற கண் விழித்திரையின் அமைப்பு மற்றும் ரத்த குழாயில் ஏற்படக்கூடிய மாற்றம் ஆகும். இதனால் ரத்தக்குழாயில் சேதம் ஏற்பட்டு, ரெட்டினாவில் ரத்தபோக்கு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.

இதை கண் மருத்துவரால் மட்டுமே முறையான கண் பரிசோதனையின் போது ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும். லேசர் சிகிச்சையினால் இந்த ரெட்டினோபதியை குணப்படுத்த முடியும் அல்லது தடுக்க முடியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முறையான கண் பரிசோதனையை 6 மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வதன் மூலம் ரெட்டினோபதியினால் வரும் பார்வை இழப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்.உலகம் முழுவதும் 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் க்ளக்கோமா கண் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. கண்ணில் அழுத்தம் அதிகமாவது, கண்ணில் உள்ள நரம்பில் மாற்றம் ஏற்படுவது மற்றும் சுற்றுப்பார்வை சரியாக இல்லாமல் இருப்பது ஆகியவை க்ளக்கோமா எனப்படுகிறது. இது 60 முதல் 70 சதவீதம் ஏற்படும் வரை தானாக கண்டறிய முடியாது. கண் மருத்துவரால் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும். இல்லையெனில் க்ளக்கோமா உள்ளவர்கள் தாங்கள் அறியாமலேயே படிப்படியாக தங்களுடைய பார்வையை இழக்க நேரிடும்.

முறையான கண் பரிசோதனை மூலம் க்ளக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கண்பார்வை மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். இதை மருந்துகளால் லேசர் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home