4 September 2014

நிம்மதியை கெடுக்கும் குறட்டை

தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் அந்த உறக்கத்தில் ஏற்படும் குறட்டை என்பது நமக்கு தொந்தரவு இல்லையென்றாலும், உடனிருப்பவர்களை பாடாய்படுத்திவிடும். கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வாங்குபவர்களை விட இப்போதெல்லாம் குறட்டை சத்தத்துக்காக விவாகரத்து வாங்குவது என்றாகிவிட்டது. ஆனால் உறக்கத்தில் தன்னையும் அறியாமலேயே இந்த குறட்டை ஏற்படுகிறது.

நாள் முழுவதும் வேலை பார்த்து களைத்த மனிதன் வீட்டிற்கு வந்து படுத்து தன்னை மறந்து தூங்கும் போது, அவனிடமிருந்து எ ழும் குறட்டை சத்தம் பக்கத்தில் படுத்திருப்பவர்களை தூங்கவிடாது. காலையில் குறட்டை பற்றி அவர்களிடம் கேட்டால் நான் கு றட்டை விட்டேனா என்று கேட்பார்கள். குறட்டை என்பது வேலை செய்த களைப்பால் மட்டும் வருவது கிடையாது. உடலில் உள்ள நாக்கில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக குறட்டை வருகிறது. உள்நாக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பேலட் என்றழைக்கப்படும் பகுதி தடிமனாக மாறும் போது, மூச்சுக்குழாய் வழியாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு வாய் வழியாக மூச்சு விடும் போது உள்நாக்கு வேகமாக அசைந்து பேலர் மீது உரசுகிறது. இந்த அதிர்வு சத்தத்தையே நாம் குறட்டை என்கிறோம். பொதுவாக உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கே குறட்டை பிரச்சனை இருக்கும். குறட்டை என்பது ஒரு நோய் இல்லையென் றாலும் இதனால் வரும் பக்கவிளைவுகள் மிகவும் அதிகம். மூச்சுக்குழாயில் காற்று செல்லாவிடில் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கு றைந்துவிடும். இதனால் இதயம் தொடர்பான நோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் திடுக்கிட்டு விழிக்க இது தான் காரணம்.

குறட்டை பிரச்சனைக்கு மாத்திரை, மருந்துகள், மூலம் தீர்வு காண முடியாது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், ஒரு சில தூக்க மாத்திரைகளை உட்கொண்டு குறட்டையில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைப்பவர்கள் உண்டு. இவ்வாறு செய்தால் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஆனால் குறட்டை பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்டுவிடலாம். அறுவை சிகிச்சை என்ற உடனே பயப்பட வேண்டாம். கத்தியின்றி, ரத்தமின்றி செய்யும் லேசர் சிகிச்சை. தொண்டையில் உள்ள டான்சில் என்ற பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து கொடுத்து பேலட் சதையின் அளவு குறைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்வதால் வீக்கமோ, இரத்தக்கசிவோ ஏற்படாது. இதுவரை இந்தியாவில் குறட்டை பிரச்சனைக்கு சுமார் 700க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறட்டை இரகசியம் இந்தப் பெருமை ஆண்களுக்கே!

பெண்களை விட இரு மடங்கு குறட்டை ஆண்கள் பக்கம் இருந்தே வருகிறது. அடினாய்டு திசுவின் அதீத வளர்ச்சி காரணமாகவோ, மூக்கில் ஏற்படும் தடையாலோ சில நேரங்களில் குறட்டை வெளிப்படலாம். ஆனால் பரிணாம வளர்ச்சிக்கும். இதில் பங்கு உண்டு. நாம் பேசத் தொடங்கி மொழிகள் தோன்றிய பிறகு, நம் குரல்வளைகள் கழுத்துப்பகுதியில் சற்றே கீழ் இறங்கியிருக்கின்றன. இதனால் நாக்குக்குப் பின்புறம் சிறு இடைவெளி ஏற்படுகிறது. இதற்கு oropharynx என்று பெயர். மற்ற தசைகளைப் போலவே, நாம் உறங்குகையில் நாக்கும் ரிலாக்ஸ் செய்து கொள்வதால் அந்த இடைவெளியில் நாக்கு ப்பகுதி விழுகிறது. அப்போது நாம் முதுகு தரையில் படும்படி உறங்கினால் சுவாசிப்பதில் தடை ஏற்பட்டு, குறட்டையாக வெளிப்ப டுகிறது. இந்த இடைவெளி பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதால்தான், ஆண்கள் குறட்டை விட்டுக்கொண்டே தூங்குகிறார்கள். பெண்கள் குறட்டைச் சத்தம் கேட்டு எழுந்துவிடுகிறார்கள்.

-அஷ்ரப்


நன்றி:தினகரன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home