22 September 2014

ஆரோக்கிய ஆப்ஸ்

ஆரோக்கிய ஆப்ஸ்
ஞா.சுதாகர்
இன்ஸ்டன்ட் ஹார்ட் ரேட் (Instant heart rate):
இதன் பணி நமது இதயத் துடிப்பை கணக்கிட்டுக் கூறுவது. நமது செல்போன் போதும். நம் இதயத்துடிப்பை சரியாகக் கணக்கிட்டுக் கூறிவிடும் இந்த அப்ஸ். இப்படி ஒவ்வொரு முறையும் கணக்கிட்டதைப் பதிவு செய்து, மாத இறுதியில் விளக்கப் படமாகவும் காண்பிக்கிறது. இதன் மூலம் நம் இதயச் செயல்பாடுகளை அறிந்துகொள்வதுடன், இதில் மாற்றம் ஏற்படும்போது மருத்துவரை அணுக வேண்டியதையும் அறிவுறுத்திவிடும்.
 
க்விட் ஸ்மோக்கிங்  (Quit smoking):
புகைப்பதை நிறுத்த நினைப்பவர் களுக்கான அப்ஸ் இது. ஒருவர் புகைப்பதை எப்போது நிறுத்த நினைக்கிறாரோ, அன்றைய தினம் இதில் அவருடைய விருப்பத்தைக் குறிப்பிட்டுவிட்டால் போதும்... பின்னர், ஒவ்வொரு நாளும் அவர் புகைப்பதை நிறுத்தவைக்கும் வகையான அறிவுரைகள் போனில் தோன்றும். புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் படத்துடன் விளக்கும். மேலும் அந்த நபர், சிகரெட்டை விட்டதால் ஏற்பட்டுள்ள உடலியல் மாற்றங்கள், பொருளாதார மிச்சம் போன்ற விஷயங்களைக் கணக்கிட்டுக் காண்பித்து, புகை பிடித்தலை விட்டொழிக்கப் பெரிதும் உதவுகிறது. அப்புறம் என்ன சிகரெட்டை டெலிட் பண்ணுங்க, இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் பண்ணுங்க!
டெய்லி யோகா(Daily yoga)
யோகாசனத்தைச் செய்ய விருப்பமும் நேரமும் இருந்தும்், கற்றுக்கொடுக்க யாரும் இல்லை என ஏங்குவோருக்கு இது நல்ல நண்பன். எந்தெந்த உறுப்புக்கு என்னென்ன ஆசனங்கள் எனத் தனித் தனியாகத் தரப்பட்டுள்ளது சிறப்பு. கூடவே வீடியோ விளக்கங்களும் உண்டு. நீங்கள் மாதத்தில் எத்தனை நாள் யோகா செய்துள்ளீர்கள் என்பதைக் காட்டி அதற்கேற்ப உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் வழங்கு
கிறது.
மைப்ரெக்னன்சி டுடே (My pregnancy today):
இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ஸ் இது. முற்றிலும் கர்ப்பிணிப் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. இதனை ஒரு முறை பதிவிறக்கம் செய்துவிட்டு உங்கள் டைமரை நீங்கள் ஆன் செய்தால் போதும்... அந்த நொடி முதல் நீங்கள் கருவுற்று இருப்பதாகக் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள் படங்களாகத் தொகுக்கப்பட்டு தினமும் காட்டப்படும். கூடவே, ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள், பயிற்சிகள் என அறிவுரைகளையும் அளிக்கிறது. குழந்தை பிறந்த பின்னும் இந்த செயலி, அறிவுரைகளை வழங்குவது சிறப்பு!
நூம் வெயிட் லாஸ் கோச்  (Noom weight loss coach):
உடல் இளைக்க நினைப்பவர்கள் தற்போதைய எடை, உயரத்தைப் பதிந்துவிட்டு இதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறை உண்ணும்போதும், அந்த உணவுப் பொருளின் கலோரி அளவைக் கணக்கிட்டு, அந்த நாளில் மொத்தம் எத்தனை கலோரிகள் உங்கள் உடலில் சேர்ந்துள்ளன என்பதைக் கணக்கிடுகிறது. `இன்றைக்கு இத்தனை கலோரிதான் இலக்கு’ என்பதை நிர்ணயித்துவிட்டால் போதும்... அதைத் தாண்டி நாம் பதியும்போதே நம்மை எச்சரிக்கும். ஆனால் இதில், நம் நாட்டு உணவு வகைகள் நிறைய இல்லை என்பது ஒரு குறைபாடு. நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைக் குறிக்கும்போது, அதற்கான கலோரியைக் கணக்கில் இருந்து கழித்துவிடுகிறது. மொத்தமாக மாத இறுதியில் படம் மூலம் விளக்கும் வசதி இருப்பதால், நம் பழக்கவழக்கத்தை மாற்றியமைத்து உடல் மெலிய உதவுகிறது.
 ஐ டெஸ்ட் (Eye test):
உங்கள் கண்களை நீங்களே சோதித்துக்கொள்ளலாம். கணிணி சார்ந்த பணியாளர்களுக்கு இது, நிச்சயம் உதவும். இதைப் பதிவிறக்கம் செய்துவிட்டால், 6 வகையான கண் பரிசோதனைகளைத் தருகிறது. நிறக்குருடு, பார்வை இழப்பு போன்றவற்றை முன்கூட்டியே தடுக்க இந்த அப்ளிகேஷனில் உள்ள பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது நலம் தரும். சில பரிசோத
னைகளுக்கு உட்படுத்தி மதிப்பெண்களையும் அளிக்கிறது. மதிப்பெண் குறையும் போது அதற்கான அறிவியல் விளக்கத்தை அளிப்
பதுடன், மருத்துவரை நாடவும் வலியுறுத்துகிறது. உங்கள் வயதுக்கேற்ப டிப்ஸ்களைத் தருவதால், கண்களைக் காப்பதற்கு உதவும்!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home