ஒற்றை தலைவலியா நரம்பியல் நிபுணரை பாருங்கள்
ஒரு பக்க தலைவலி பெரும்பாலும் பெண்களுக்கு வருகிறது. இந்த தலைவலி சில மணி
நேரங்களோ, சில நாட்களோ நீடிக்கும். இந்த தலைவலி வாரத்தில் 2 நாளுக்கு மேல்
வந்தாலோ, மாதத்திற்கு ஒரு முறை வந்தால் கூட அதிக வலி ஏற்பட்டு வேலை பார்க்க
முடியாமல், தூங்க முடியாமல் போனாலோ அது சிகிச்சைக்குரிய தலைவலியாகும்.
இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. வேலை பார்க்க
முடியாது. தலைவலியால் தூக்கம் வராது, சிலருக்கு மயக்கம், வலிப்பு, பக்க
வாதம் ஏற்படலாம்.
பொதுவாக இத்தகைய தலைவலி மன அழுத்தம், பயணம், வெயில், நேரத்திற்கு சாப்பிடாதது, தலை குளிப்பது, மாதவிலக்கு, சீதோஷ்ண நிலை மாற்றம், சாக்லெட், காபி, டீ அதிகம் சாப்பிடுவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. இதில் எதனால் தலைவலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மூலம் கண்டுபிடித்தால் 50 சதவீதம் பேருக்கு தலைவலியை தடுக்க முடியும். மேலும் உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றின் மூலமும் தலைவலியை போக்க முடியும்.
இவற்றை மேற்கொண்டும் தலைவலியை போக்க முடியவில்லையென்றால் சில மாதங்கள் மருந்து சாப்பிட வேண்டும். பலர் தங்களுக்கு வரும் ஒற்றை தலைவலிக்கு அவ்வப்போது மருந்து கடையில் தலைவலி மாத்திரை சாப்பிட்டு வலியை மறைக்கிறார்கள். இதனால் ஒற்றை தலைவலியை போக்க முடியாது. இதனால் சாதாரணமாக உள்ள தலைவலி பெரிய பிரச்னையாக மாறிவிடும். சிலர் தங்களது தலைவலி கண் சம்பந்தப்பட்ட பிரச்னை, காது, மூக்கு, தொண்டை பிரச்னை என்று தாங்களாகவே கருதி கொண்டு, கண் டாக்டரிடமோ, காது, மூக்கு, தொண்டை டாக்டரிடமோ சிகிச்சை செய்கிறார்கள்.
ஸ்கேன் எடுக்கிறார்கள், ரத்த பரிசோதனை செய்கிறார்கள். இது தவறான அணுகுமுறை, ஒற்றை தலைவலிக்கும் கண், காது, மூக்கு, தொண்டைக்கும் சம்பந்தமில்லை. ஒற்றை தலைவலி ஏற்பட்டால் நரம்பியல் நிபுணரிடம் சென்றால் மட்டுமே சரியான சிகிச்சையை பெற முடியும், ஒற்றை தலைவலியை போக்க முடியும்.இதனால் ஒற்றை தலைவலி ஏற்பட்டவர்கள் துவக்க நிலையிலேயே நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். இதற்கு ரத்தபரிசோதனையோ, ஸ்கேன் மூலமோ ஆய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. மருந்துகள் மூலம் எளிதில் குணம் பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-அஷ்ரப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home