11 September 2014

கர்ப்பகால வலிகள்




தலைவலியா, முதுகுவலியா மருத்துவரைக் கேட்டால் தாமாகவே வலி நிவாரணியை விழுங்கி விட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள்  எக்கச்சக்கம். மற்ற நாட்களில் எப்படியோ... கர்ப்ப காலத்தில் உண்டாகிற எந்த வலியும் இப்படி அலட்சியமாக கையாளப்  படக்கூடியதல்ல. அப்படி சுய  மருத்துவம் செய்து கொள்கிற போது அது தாய், சேய் இருவரின் உயிர்களுக்குமே ஆபத்தாக  முடியலாம் என்கிறார் வலி நிவாரண சிகிச்சை நிபுணர்  டாக்டர் குமார்

கர்ப்ப காலத்துலயும், தாய்பால் கொடுக்கிற காலத்துலயும் பெண்கள் வலியால அதிகம் அவதிப்படறாங்க. வயிற்று வலி, இடுப்பு வலிமுதுகு வலி  மற்றும் தலைவலி இந்த நான்கும் கர்ப்ப காலத்துல சகஜமா இருக்கு. கர்ப்பம் தரிக்குறதுக்கு முன்னாடி இந்த மாதிரி  வலிகள் இருந்து அதுக்கு  எடுத்துகிட்ட மருந்துகளையே கர்ப்பமான பிறகும் எடுத்துக்கிறவங்க இருங்காங்க. இது ரொம்ப ஆபத்தானது. குறிப்பாக கர்ப்பத்தோட முதல் 10  வாரங்கள்ல மருத்துவர் அறிவுரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்ககூடாது.

அதேபோல 34 வாரங்களுக்குப்பிறகு  எடுத்துக்கிற மருந்துகளாள கருவுல உள்ள குழந்தையோட நுரையீரல் பாதிக்கப்படலாம். முதல்ல வயிற்றுவலிகருச்சிதைவு, கருமுட்டை வெடித்தல்சதை வலி, கருப்பை தசைநார் விரிவடைதல், வயிற்றுத்தசைல ரத்தம்  கட்டுதல்னு, கர்ப்ப கால  வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலமா காரணத்தை கண்டு பிடிச்சி, தாமதிக்காம தாமதிக்காம சிகிச்சையை  ஆரம்பிக்கணும். அடுத்து இடுப்பு வலி.

கர்ப்ப காலத்துல உண்டாகிற ஹார்மோன்  மாறுதல்களால, இடுப்பு எலும்பு இணைப்புகள்ல வலி வரும். முதுகு தண்டுவடம் பிதுங்கினா உண்டாகிற  முதுகு வலி மாதிரியே ருக்கும் இது. பிரத்யோகமான பிசியோதெரபி மற்றும் மருந்தில்லா சிகிச்சைகள் ஜாயின்ட்டுகள்ல போடக்கூடிய ஊசிகள்  மூலமா  இதைச் சரியாக்கலாம். மூணாவதா முதுகுவலி. 50 சதவீத கர்ப்பிணிபெண்களுக்கு முதுகு வலி இருக்கு. அதுல 10 சதவீதத்தினருக்கு மேல்  முதுலயும், 40  சதவீதத்தினருக்கு அடி முதுகுலயும் வலிநிறையபெண்களுக்கு உட்காரும் இடத்தில் வலியும் அதிகமா இருக்கு.

குறைப்பிரசவம்பனிக்குடம் சீக்கீரம் உடைதல், சிறுநீர் பிரச்சனையெல்லாம் இடுப்பு வலியாதான் உணரப்படும். எப்படி உட்காரணும், கீழே விழுந்த  பொருளை எப்படி தூக்கணும்னு அடிப்படை பயிற்சிகளைக் கத்துக்கொடுத்து, ஏரோபிக்ஸ்னு  பயிற்சி மற்றுத் டென்ஸ் சிகிச்சை மூலமா இவங்களுக்கு  நிவாரம் தரலாம். எலாஸ்டிக் இல்லாத பெல்ட்டுகளையும் தேவைப்பட்டா  பரிந்துரைப்போம்.

கடைசியா தலைவலி. கர்ப்ப காலத்துல உண்டாகிற தலைவலி, தானா சரியாயிடும். தலைவலிக்கான மருந்துகள் ரொம்ப  வீரியமானவைங்கிறதாலஎக்காரணம் கொண்டும் டாக்டரை கேட்காம தலைவலிக்கு மருந்து எடுக்கக்கூடாது. சரியான நேரத்துல சரியான டாக்டரை அணுகி சரியான  சிகிச்சையை எடுத்துக்கிட்டா, வலிகள்லேர்ந்து விடுபடலாம் என்கிறார் டாக்டர் குமார்.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home