4 January 2013

பாதாம் பால் செய்யும் முறை

பாதாம் பால் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
பாதம் - 20
முந்திரி - 20
பிஸ்தா - 20
நெய் - தாளிக்க
கிஸ்மிஸ் - 8
இலவங்கப்பட்டை- சிறிது
ஏலம் - 3
கசகசா - 2 தேக்கரண்டி
சீனி - தேவையான அளவு

செய்முறை

முதலில் பாதம், பிஸ்தாவை தோல் நீக்கிவைக்கவும்.

பின் 15 பாதம், 15 முந்திரி, 15 பிஸ்தாவை கசகசாவுடன் சேர்த்து நன்கு மைபோல் அரைத்துக்கொள்ளவும்.

பாலை காய்ச்சி தனியே வைக்கவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து நெய் ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலம் போட்டு தாளித்து காய்ச்சிய பாலை ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்கு வற்ற காய்ச்சவும்,

தீயை மிதமானதாக வைத்துக்கொள்ளவும்.

பின் மீதமுள்ள பருப்புகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பால் நன்கு வற்றி வரும்போது நறுக்கிய பருப்புகளையும், கிஸ்மிஸையும் சேர்த்து காய்ச்சி சீனி சேர்த்து கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கவும்.

இப்பொழுது உங்களுக்கு சூடான சுவையான பாதாம் பால் ரெடி
..... 

தயாரிப்பு : செய்யத் கதீஜா 

நன்றி : சமையல் செய்வது எப்படி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home