10 January 2013

சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் பெண் நியமனம்...........!!

சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் பெண் நியமனம்...........!!
சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்,

தற்போது சமுதாயம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி ஹலிமா யாகூப், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அடுத்த வாரம் கூட இருக்கும் பாராளுமன்றத்தில் திருமதி ஹலிமா யாகுப் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார், 

சட்டதுறையில் நிபுணத்துவம் பெற்ற திருமதி ஹலிமா, அரசியலுக்கு வரும் முன் சிங்கப்பூரின் முக்கிய தொழிற் சங்கமான என்டியூசியில் துணை பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க அமைப்பில் பணி செய்த ஹலிமா, உலக தொழிலாளர் அமைப்பின் உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்,

நடமாடும் தொழிலாளர் அகராதி எனப் பெயர்பெற்ற திருமதி ஹலிமா, கடந்த 8 ஆண்டுகளாகப் பாராளுமண்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். சென்றமாதம் முந்தைய சபாநாயகர் மைக்கேல் பால்மர் தகாத உறவு காரணமாக பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து காலியான சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home