5 January 2013

அரபு நாட்டு ஷேக்குகளின் ஷோக்குகளுக்கு இறையாகின்றனரா இந்திய பெண்கள்.............???



அரபு நாட்டு ஷேக்குகளின் ஷோக்குகளுக்கு இறையாகின்றனரா இந்திய பெண்கள்.............???
மிட் டேயின் முட்டாள் தனமான புலனாய்வு ஓர் அலசல் ரிப்போர்ட்.!!

அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன் அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்ப­ட்டுள்ளது, 

வெறிபிடித்த கும்பலுக்கு இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது, மும்­பை, புனே, டில்லி நகரங்களில், மிட் - டே என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர் கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர் பூபன் படேலும் ஒரு மாதத்திற்கும் மேலாக ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி விவரம் : 

இந்தியாவிற்கு சுற்றுலா விசாவில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர் மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும்­ பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர், அதற்காகவே உள்ள ஏஜண்டுகள் அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும்­ இடங்களுக்கு பெண்களை கூட்டி செல்கின்றனர், பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும் என விரும்பும் ஷேக் அந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொள்கின்றனர், திருமணத்தை முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார், 

விசா காலம் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து விவாகரத்தும் செய்து விடுகிறார், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண் கசக்கி வீசப்படுகிறாள்.

இது தான் மிட்டே பத்திரிகையின் புலனாய்வு ? 

---------------­---------------­---------------­------------

இதை ஒரு தமிழகத்தின் பார்ப்பன பத்திரிக்கையான தினமலம் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி படிப்பவர்களின் பார்வையில் படுவது போல் வைத்துள்ளது,

இந்தியாவில் நடக்கும் பெண்களுக்கெதிரா­ பாலியல் கொடுமைகளை கண்டித்து குரலெழுப்பும் மக்கள் இதை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் போல் இருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கூறி வருவாதால் எரிச்சல் அடைந்த பார்ப்பன பத்திரிகை ஏற்கனவே பலமுறை விளக்கமளித்து விட்ட மேட்டரை திரும்ப போட்டு மதவெறியை தனித்துக் கொண்டுள்ளது,

உண்மை நிலை அதுவல்ல மேல்படி பத்திரிகை ஸ்டைலில் ஷோக்குக்காக இந்தியாவுக்கு ஷேக்குகள் மட்டும் வருவதில்லை ஐரோப்பியர்கள் முதல் ஆப்பிரிக்கர்கள்­ வரை மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு இணைய தளம் மூலம் தகவல் அறிந்து ஷோக்குகள் நடக்கும் பகுதிகளுக்கு நேரடியாகவும் செல்வர், ஏஜன்டுகள் மூலமாகவும் செல்வர், அந்த வரிசையில் அரபுகளும் அடங்குவர்,

ஆனால் இதில் அரபுகள் மட்டும் மத சடங்குகள் பிரகாரம் (வந்திறங்கியதும் திருமனம் விடைபெறும் போது தலாக்) செய்ய வெண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுவது வடிகட்டிய மத துவேஷம்,

இவ்வாறு எழுதப்பட்டதன் நோக்கம் இஸ்லாத்தில் இதுபோன்ற சட்டம் இருப்பதாக சொல்வதற்காகத் தான்,

வேண்டும் என்றால் இதை இஸ்லாத்தை அறியாத அவாள்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்ளலாம் இஸ்லாத்தை அறிந்தவர்களுக்கு சொல்ல முடியாது,காரணம் இது சத்திய தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தடை செய்து ஹராமாக்கி விட்டார்கள்,

கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்அவர்கள், 

முத்அத்துன்னிஸா (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். 

நூல்: புகாரி 4216. ஆறிவிப்பாளர்: அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்கள். 

சில அரபுகள் முஸ்லிம் பெண்களை திருமனம் செய்கின்றனர் அவர்களை அங்கேயே தங்கி பாஸ்போர்ட் எடுத்து அழைத்து வந்து வாழ வைக்கின்றனர், இது தான் உண்மை நிலை.

ஆனால் இந்திய ஊடகங்கள் முஸ்லிம்களின் விசயத்தில் இருட்டடிப்பு செய்து வருவதையே பிழைப்பாக வைத்து காலம் கடத்தி வருகிறது, 

ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்து செய்திகளை வெளியிட்டாலும் நாம் உண்மை செய்திகளை வெளியிட்டு ஊடகங்களின் முகத்திரையை கிழிக்க தான் போகிறோம், 

வேண்டுமென்றால் மும்பை, டெல்லி, கெல்காத்தா போன்ற நகரங்களில் வெட்ட வெளியில் காசுக்காக கடைவிரிக்கப்பட்­டுள்ள ஷோக்குகளை தடுக்கட்டும். ஷோக்குக்காக ஷேக்குகள் வருவது­ தாமாக நின்று விடும்.

அது தான் தேசத்தின் நலனுக்கு உகந்தது மாறாக குறிப்பிட்ட ஒரு மத்தவரின் சட்டத்தை சீண்டக் கூடாது,




நன்றி : சகோதரர் அதிரை ஃபாரூக் & சகோதரர் அலீம் ஹுசைன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home