டெல்லியில் தூள் பறக்கும் பெப்பர் ஸ்ப்ரே வியாபாரம்!!
தலைநகர் டெல்லியில் அண்மையில் நடந்த பேருந்து பாலியல் குற்றத்தால் பீதியடைந்த பெண்கள் இப்போதெல்லாம் தங்களை பாதுகாத்துக்கொள்ள பெப்பர் ஸ்ப்ரேக்களை வாங்கி வைத்துள்ளனர்.கொஞ்சம் வசதி படைத்த பெண்கள் லேட்டஸ்ட்டாக வந்துள்ள பெப்பர் ஸ்ப்ரே உள்ள ஐபோன் வாங்கி வைத்துள்ளார்கள்!
முன்னெல்லம் ஒரு வாரத்திற்கு 10 – 20 பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்கள் மட்டும் விற்பனையாகும் நிலையிலிருந்து தற்போது நாளொன்றுக்கு 300 பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்களுக்கும் மேல் விற்பனையாகி வருகிறது. ஒரு ஸ்ப்ரே ரூ. 150 முதல் ரூ.500 வரையில் பல வகைகளில் விற்பனை செய்யப்படும், இவை மிளகாய் பொடி ப்லேவரிலும் கிடைக்கிறது.
.
தனிப் பட்ட பெண்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு அலுவலங்களும் தங்களின் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மொத்தமாக ஆர்டர் செய்து இந்த பெப்பர் ஸ்ப்ரே வாங்கி வழங்கி வருகின்றன..
.
* இந்த பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்களால் 6 அடி தூரம் வரை ஸ்ப்ரே செய்ய முடியும் என்பதால் பெண்கள் தேவைப்படும்போது சுலபமாக உபயோகித்துகொள்ளலாம்.
* பொதுவாக இந்த பெப்பர் ஸ்ப்ரேவை எப்போதுமே தங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எங்கு சென்றாலும், கூடவே அந்த பையையும் கொண்டு செல்ல வேண்டும். தேடும் வகையில் அதனை வைத்துவிட வேண்டாம்.
* தன்னை தாக்க வரும் போது, அவர்கள் முகத்திற்கு முன்பு அந்த ஸ்ப்ரேவை அடிக்க வேண்டும். அவ்வாறு அடிக்க போகும் போது, அது அவர்களுக்கு தெரியாதவாறு எடுத்து தெளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் உஷாராகி, பின் அந்த பெப்பர் ஸ்ப்ரே இருப்பதும் வீணாகிவிடும்.
* அருகில் வந்த பின்னர் அதனை எடுத்து தெளிக்க வேண்டும். அதை விட்டு, அவர்கள் சற்று தொலைவில் இருக்கும் போது எடுத்துவிட வேண்டாம். பின்னர் அதை அவர்கள் வாங்கி தூக்கி போட்டுவிடுவர்.
* ஸ்ப்ரே செய்யும் போது ஒரு முறை அடித்தாலே போதுமானது. அது அவர்களுக்கு குறைந்தது 3-4 நிமிடம் கண்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் இந்த நேரத்தில் மற்றவர்களை அழைத்து உதவி கேட்க முடியும்.
* எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தும் போது, அதனை எதிரிகளின் கண்களை தாக்கும் வகையில் குறி வைத்து தெளிக்க வேண்டும். மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, பெப்பர் ஸ்ப்ரேவை பயன்படுத்தினால், ஆபத்தை எளிதில் தடுக்க முடியும்.
*கிட்டத் தட்ட ஐ போன் பெப்பர் ஸ்ப்ரேயையும் இதே போல் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைத்துள்ளார்கள்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சிறிய கத்தி, மிளகாய் பொடி, பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை வைத்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவசியம் இல்லாத நேரத்தில் இந்த பொருட்களை உபயோகிக்கக்கூடாது என கூறினார்.
Pepper spray selling like hot cakes in Delhi!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home