கணினி திரையில் பெயிண்ட் செய்வது எப்படி
கணினி திரையில் பெயிண்ட் செய்வது எப்படி
பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்படும் துணை புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படையிலேயே இயங்கும். ஆனால், விண்டோஸ் 8
சிஸ்டம் தான் இயங்கும் வகையில் புதிய, முற்றிலும்
மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம்
Fresh Paint.
மேலோட்டமாகப் பார்த்தால், நாம் நம் விரல்களாலேயே, மானிட்டர் திரையில் படம் வரையக் கூடிய வசதிகளைத் தரும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான பிரஷ்களுடன், கலர் பேலட் ஒன்று தரப்பட்டு, படம் வரையும் அனுபவத்தினை மிக மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுகிறது.
இதனை இயக்கிப் பார்க்கையில், இது பழைய
MSPaint புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட புரோகிராம் அல்ல, முற்றிலும் புதிய புரோகிராம் எனத் தெரியவரும். இதில் நாம் படம் வரையும்போது, படம் வரையும் கேன்வாஸ் ஒன்றில், ஆயில் பெயிண்ட் கொண்டு நாமே வரையும் அனுபவத்தினை இது தருகிறது.
இந்த புரோகிராமினைத் தர, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐந்து விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். பெயிண்ட் புரோகிராம்
வடிவமைப்பது எளிதான ஒரு செயல் அல்ல. எண்ணிப் பாருங்கள். பெயிண்ட் பிரஷ் ஒன்றின் ஆயிரக்கணக்கான இழைகளும் தரக்கூடிய வண்ணத்தைத் திரையில் அமைக்க, எவ்வகையான குறியீடுகளை புரோகிராம் செய்திருக்க வேண்டும்.
இதனை சோதனை செய்தபோது, ஏறத்தாழ
60 ஆயிரம் பேர், சோதனை செய்து பார்த்துச் சரியான கருத்துக்களை வழங்கினார்கள். இவற்றின் அடிப்படையில், இந்த புரோகிராம் முழுமையாக்கப்பட்டு விண்டோஸ் 8
சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, அதன் சோதனை தொகுப்பில் தரப்பட்டது. இந்த புரோகிராம் குறித்து இதனைப் பயன்படுத்திப் பார்த்த மக்கள் தந்த பின்னூட்டுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன.
புரோகிராம், அடோப் போட்டோ ஷாப் போன்ற வரைவதற்கான வசதிகள் பல கொண்ட புரோகிராம் அல்ல. ஆனால், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராம்களில், இது ஒரு தனி சிறப்பினைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 8
சிஸ்டம் கம்ப்யூட்டர்களை வாங்கியவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்தால், இதனைத் தெரிந்து கொள்வார்கள்.
மாறுபட்ட மாற்றத்தினைக் கொண்டு வந்ததால், அனைத்து புரோகிராம்களும் புதிய சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன் படுத்துகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு முழுமையாகப் பயன்படுத்தும் ஓர் அருமையான புரோகிராம் Fresh Paint.
மேலோட்டமாகப் பார்த்தால், நாம் நம் விரல்களாலேயே, மானிட்டர் திரையில் படம் வரையக் கூடிய வசதிகளைத் தரும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வகையான பிரஷ்களுடன், கலர் பேலட் ஒன்று தரப்பட்டு, படம் வரையும் அனுபவத்தினை மிக மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுகிறது.
இதனை இயக்கிப் பார்க்கையில், இது பழைய MSPaint புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட புரோகிராம் அல்ல, முற்றிலும் புதிய புரோகிராம் எனத் தெரியவரும். இதில் நாம் படம் வரையும்போது, படம் வரையும் கேன்வாஸ் ஒன்றில், ஆயில் பெயிண்ட் கொண்டு நாமே வரையும் அனுபவத்தினை இது தருகிறது.
இந்த புரோகிராமினைத் தர, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐந்து விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். பெயிண்ட் புரோகிராம்
வடிவமைப்பது எளிதான ஒரு செயல் அல்ல. எண்ணிப் பாருங்கள். பெயிண்ட் பிரஷ் ஒன்றின் ஆயிரக்கணக்கான இழைகளும் தரக்கூடிய வண்ணத்தைத் திரையில் அமைக்க, எவ்வகையான குறியீடுகளை புரோகிராம் செய்திருக்க வேண்டும்.
இதனை சோதனை செய்தபோது, ஏறத்தாழ 60 ஆயிரம் பேர், சோதனை செய்து பார்த்துச் சரியான கருத்துக்களை வழங்கினார்கள். இவற்றின் அடிப்படையில், இந்த புரோகிராம் முழுமையாக்கப்பட்டு விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு, அதன் சோதனை தொகுப்பில் தரப்பட்டது. இந்த புரோகிராம் குறித்து இதனைப் பயன்படுத்திப் பார்த்த மக்கள் தந்த பின்னூட்டுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தன.
புரோகிராம், அடோப் போட்டோ ஷாப் போன்ற வரைவதற்கான வசதிகள் பல கொண்ட புரோகிராம் அல்ல. ஆனால், இதுவரை விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராம்களில், இது ஒரு தனி சிறப்பினைக் கொண்டுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டம் கம்ப்யூட்டர்களை வாங்கியவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்தால், இதனைத் தெரிந்து கொள்வார்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home