7 March 2013

புகைப்படக்கலைஞரான Gerry Van Der Walt 2009இன் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம்

புகைப்படக்கலைஞரான Gerry Van Der Walt 2009இன் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம்

பெரும்பசியோடு மானொன்றை வேட்டையாடிய பெண்சிங்கமொன்று, அந்த மான் கருவுற்றிருப்பதை உணர்ந்து பதைபதைத்து, அதன் வயிற்றிலிருந்த குட்டியை வெளியே இழுத்து, தாய்மை உணர்வுடன் காப்பாற்றத் துடிக்கும் காட்சி அது!

அந்தக்குட்டியை முகர்வதும், உதவிக்காக சுற்றிவரக் கண்களைச் சுழலவிடுவதுமென்று அந்த பெண் சிங்கத்தின் பரிதவிப்பு தொடர்ந்துகொண்டிருக்க, சிறிது நேரத்தில் குறைப்பிரசவமான மான்குட்டியும் இறந்துவிட, ஆராமையுடன் அங்குமிங்கும் உலவும் சிங்கம் சிறிதுநேரத்தில், தரையில் மெல்ல சரிந்துவிழுகிறது.

நீண்டநேரம் காத்திருந்த Gerryயின் புகைப்படக்குழுவினர் அருகில் சென்று பார்த்தபொழுது, ஒருபக்கம் வாட்டிய பசியைத் தாளமுடியாமல், தாயையும் குட்டியையும் கொன்ற குற்ற உணர்வில், அந்த இரையையும் உண்ணாமல், தன்னையே நொந்து மடிந்துபோய்க்கிடந்தது அப்பெண்சிங்கம்!

இயற்கையின் விதிகளை மீறி, தாய்மை, பரிதாபம் என்ற உணர்வுகள் ஐந்தறிவு படைத்த ஒரு ஊனுண்ணி விலங்கின் நெஞ்சத்தைக் கூட கரைத்துவிடுகின்றன..

---------------------------------------------------------------------------------------------------
ஆனால் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கு உள்ள குற்ற உணர்வு கூட ஆறு அறிவு மனிதனுக்கு இல்லையே!!!!!

"
மனிதம் என்றோ மரணித்து விட்டது

1 Comments:

At 14 March 2013 at 19:43 , Blogger Osai Chella said...

இதுதான் இயற்கை மீது நமது எண்ணத்தை ஏற்றுவது ! அந்த சிங்கம் சாகவில்லை ! ஆனால் அது அன்று விரதமிருந்தது ! குட்டியையும் தாயையும் சாபிடவில்லை ! http://www.wild-eye.co.za/photochat/the-real-story/

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home