6 April 2013

மார்டின் லூதர் கிங்



ஐந்து வயது வரை அவரது பெயர் மைக்கேல்தான். தன் அப்பா பாஸ்டராக இருக்கும் தேவாலாயத்தில் கொயர் க்ரூப்பில் நின்று பாடிக் கொண்டிருப்பார்.
பின்னாளில் தானும் இனை - பாஸ்டராக இணைந்து தன் வாழ்நாள் எல்லாம் திருப்பலிகள் நிறைவேற்றினார்.

தன் 12 ஆவது வயதில் தன் பாட்டி இறந்ததை தாங்கி கொள்ள முடியாமல் அழுதுகொண்டே வீட்டின் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர். அவ்வளவு இளகிய மனது காரர் மார்ட்டின் லூதர் கிங் 

ஒரு மதிய நேரத்தில் அமெரிக்காவில் சிறுபான்மையினரான கறுப்பர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து பெண் போராளி ரோசா பார்க் சாலையில் ஆக்ரோஷமாக போராடுவதை பார்த்தபோதுதான், மார்ட்டினுக்குள் அந்தப் பொறி பற்றியிருக்க வேண்டும். பின்னாளில் மார்டின் லூதர் கிங் ஜுனியர் ஆக கருப்பின ஒடுக்குமுறையை சுக்குநூறாக ஒடுக்கி உரிமையை நிலைநாட்டத் தூண்டியது அந்த சம்பவம்தான். 
தன் வாழ்நாளில் 1939 ஆம் ஆண்டு தொடங்கி தான் இறந்த 1957 வரை 18 வருடங்களில் 6 மில்லியன் மைல்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மக்கள் குடிமையியல் உரிமைகளுக்காகவும் பயணம் செய்த மார்ட்டின், 2500 இடங்களில் பேசியிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்கள் படியலில் அன்னை தெரசாவுக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தவர். இவரது பெயரைத் தாங்கி மட்டுமே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900 தெருக்கள் இருக்கின்றன.
24
மணி நேரமும் மக்கள் உரிமைகளுக்காக போராடியவர் 1968ல் குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கான உரிமை மீட்பு போராட்டத்தின் போது பால்கனியில் நிற்கும் போது இதே ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி தான் தன் 39 வது வயதிலேயே படுகொலை செய்யப் பட்டு இறந்தார்!




அஷ்ரஃப் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home